நிசர்கா புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசர்கா புயல்
Severe cyclonic storm (இ.வா.து. அளவு)
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு)
சூன் 3 அன்று, நிசர்கா புயல் மகாராட்டிரா மாநிலத்தை நோக்கி வரும் காட்சி.
தொடக்கம்1 சூன் 2020
மறைவு4 சூன் 2020
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 110 கிமீ/ம (70 mph)
1-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph)
தாழ் அமுக்கம்990 hPa (பார்); 29.23 inHg
இறப்புகள்6 (மொத்தம்)
சேதம்$664 மில்லியன் (2020 US$)
பாதிப்புப் பகுதிகள்இந்தியா (மகாராட்டிரம், குசராத்து)
2020 வட இந்தியப் பெருங்கடல் புயல் பருவம்-இன் ஒரு பகுதி

நிசர்கா புயல் (Cyclone Nisarga) என்பது அரபிக் கடலில் உருவாகிய ஒரு புயல் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராட்டிரம் மற்றும் குசராத்து ஆகிய மாநிலத்தை தாக்கிய சக்திவாய்ந்த வெப்பமண்டல புயல் ஆகும்.[1] தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் உருவாகி காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்றது. சூன் 2, 2020 அன்று, நிசர்காவை புயலிலிருந்து, கடுமையான புயலாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) மறுபரிசீலனை செய்தது. அதே நேரத்தில் மகாராட்டிரா கடற்கரை பகுதியில் நிலச்சரிவையும் ஏற்படுத்தியது.[2]

21 ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட முதல் சக்திவாய்ந்த புயலான ஆம்பன் புயலுக்குப் பிறகு, இரண்டு வார காலப்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தைத் தாக்க இருக்கும், 2020 வட இந்தியப் பெருங்கடல் புயல் பருவத்தின், இரண்டாவது வெப்பமண்டல புயல் நிசர்கா ஆகும்.[3][4] 1891க்குப் பிறகு மும்பை நகரத்தை தாக்கிய, முதல் கடுமையான புயல் நிசர்கா ஆகும்.[5]

வானிலை வரலாறு[தொகு]

நிசர்கா புயல், அரபிக்கடலில் உருவாகும் காட்சி

31 மே 2020 ஆம் ஆண்டில், தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. சூன் 1 ஆம் தேதி அதிகாலையில் கிழக்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்றது, இது கோவாவிலிருந்து தென்மேற்கில் 340 கி.மீ தொலைவிலும், மும்பையிலிருந்து 630 கி.மீ தென்மேற்கிலும், குசராத்திலிருந்து 850 கிமீ தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்தது.

சூன் 2 அன்று நிசர்கா புயல், தீவிரமடையும் செயற்கைக்கோள் படம்.

சூன் 2 அன்று, நண்பகலில், இப்புயல் மேலும் தீவிரமடைந்து அதன் மூலம் நிசர்கா என்ற பெயரைப் பெற்றது. அன்று இரவு இந்த புயல் மேலும், தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிசர்கா புயல் மும்பையை தாக்கும் எனவும் மகாராட்டிரா - குசராத் இடையே நிசர்கா புயல கரையை கடக்கும் சமயத்தில், மும்பையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அப்போது 100 கிலோ மீட்டர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சொல்லப்பட்டது.

முன்னெச்சரிக்கை[தொகு]

  • மகாராட்டிரா மற்றும் குசராத் கடற்கரைகளில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிறுத்தப்பட்டனர்.
  • மும்பை பெருநகர பகுதியில் உள்ள குடிசைவாசிகள், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
  • குசராத்தின் வல்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் உள்ள 47 கடலோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
  • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.
  • புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மகாராட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில மக்களை கேட்டுக் கொண்டார்.
  • புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உதவிகள் செய்து தரப்படும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்

புயல் கரையைக் கடந்த விதம்[தொகு]

இப்புயல் சூன் 03, 2020 அன்று பிற்பகலில், வடக்கு மகாராட்டிராவின், அலிபாக் பகுதிக்கு அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் வீசியக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.[6] இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில், பலத்த மழை பெய்தது மற்றும் வெள்ளமும் ஏற்பட்டது. இந்த புயலால் பாதிக்கப்பட்டு, மகாராட்டிரா மாநிலத்தில், புனேவை சேர்ந்த மூன்று பேர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் இறந்தனர்.[7][8] இப்புயலால் ஏற்பட்ட சேதம் ரூ.50 பில்லியன் (அமெரிக்க $ 664 மில்லியன்) என மதிப்பிடப்பட்டது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Meenakshi Ray (2 June 2020). "Cyclone Nisarga: How was the cyclonic storm set to hit Maharashtra, Gujarat named" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/cyclone-nisarga-how-was-the-cyclonic-storm-set-to-hit-maharashtra-gujarat-named/story-yft0m40tmspjXc0qEHcSGN.html. பார்த்த நாள்: 2 June 2020. 
  2. Amit Chaturvedi (2 June 2020). "How dangerous is Cyclone Nisarga? IMD issues red alert, low-lying areas to be evacuated" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/how-dangerous-is-cyclone-nisarga-imd-issues-red-alert-low-lying-areas-to-be-evacuated/story-X2gyMvZXSmkJa4iHcYoc5L.html. பார்த்த நாள்: 2 June 2020. 
  3. "Cyclone Nisarga is all set to hit the country's western coast". Caringly Yours (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-02. Archived from the original on 2020-06-03. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  4. "Cyclone Nisarga live updates: Cyclone Nisarga live updates: Nisarga cyclone to intensify; Mumbai, Maharashtra, Gujarat on alert". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  5. Soutik Biswas (2 June 2020). "Mumbai bracing for the 'first cyclone in years'". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-52887879. பார்த்த நாள்: 2 June 2020. 
  6. Dey, Stela (3 June 2020). "Man Dies As Electric Pole Falls On Him In Maharashtra's Alibaug During Cyclone Nisarga". NDTV. https://www.ndtv.com/india-news/58-year-old-dies-after-electric-pole-falls-on-him-in-maharashtras-alibaug-due-to-cyclone-nisarga-news-agency-ani-2240206. 
  7. Srivastava, Ritesh (4 June 2020). "Maharashtra Cyclone Nisarga death toll rises to 6, CM announces Rs 4 lakh compensation for victims' kin". Zee News. https://zeenews.india.com/maharashtra/maharashtra-cyclone-nisarga-death-toll-rises-to-6-cm-announces-rs-4-lakh-compensation-for-victims-kin-2287966.html. 
  8. "Cyclone Nisarga | Pune reports third cyclone-related death". The Hindu. 4 June 2020. https://www.thehindu.com/news/national/other-states/cyclone-nisarga-pune-reports-third-cyclone-related-death/article31747815.ece. 
  9. Gangan, Surendra; Venkatraman, Tanushree (5 June 2020). "Cyclone Nisarga: Crops on 8,000 hectares destroyed in Maharashtra". Hindustan Times. https://www.hindustantimes.com/cities/cyclone-nisarga-crops-on-8-000-hectares-destroyed-in-maharashtra/story-4jdtSeYlDRXvn7tt3wbQdO.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசர்கா_புயல்&oldid=3790023" இலிருந்து மீள்விக்கப்பட்டது