நிக் வோய்ச்சிச்
நிக்கோலஸ் சேம்சு வோய்சிக் | |
---|---|
நிக்கோலஸ் சேம்சு வோய்சிக் | |
பிறப்பு | 4 திசம்பர் 1982[1] மெல்பர்ன், ஆஸ்திரேலியா |
இனம் | செர்பியன் |
பணி | உணர்ச்சிமயமான பேச்சாளர் மற்றும் லைப் வித் அவுட் லிம்ப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் |
சமயம் | கிறித்தவர் |
வாழ்க்கைத் துணை | கானே மியாகரா |
நிக்கோலஸ் சேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமாக நிக் வோய்ச்சிச் (/ˈvɔɪtʃɪtʃ/ VOY-chich; பிறப்பு: 4 டிசம்பர் 1982), உணர்ச்சிமயமான ஆத்திரேலியப் பேச்சாளர். இவர் பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயால் (இரு கைகளும், இரு கால்களும் இல்லாதவர்) பாதிக்கப்பட்டவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பல இன்னல்களுக்கு ஆளான இவர், தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது அகவையில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார்.[2]
சொந்த வாழ்க்கை
[தொகு]செருபிய இனத்தைச் சார்ந்த இவர்,[3] ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் என்னுமிடத்தில் பிறந்தார்.[4] இவர் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார்.
ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.
இவர் தன்னுடைய எட்டாவது அகவையில் மன உளைச்சல் காரணமாக, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார்.[5] அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி காட்டினார்[6], இது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது.
தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.
தன்னுடைய ஏழாம் வகுப்பில், பள்ளியின் மாணவத் தலைவராகவும், தங்கள் பள்ளிக்கான நன்கொடை வசூலிப்பதற்காகவும் அருகிலுள்ள தொண்டு நிறுவங்களை அணுகுதல் உள்ளிட்டவைகளை செய்பவராகவும் விளங்கினார்.[7] பிறகு தன்னுடைய இலாப நோக்கற்ற லைப் வித் அவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) நிறுவனத்தை தொடங்கினார்.
2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. தற்போது, ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.[4]
2012-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் நாள், கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[8]
தொழில்
[தொகு]வோய்ச்சிச் தன்னுடைய 21-ம் அகவையில் கிரிபித் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தார். கூடவே, மிகப்பிரபல்யமான பேச்சாளராகவும் உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவருடன் உரையாற்றியுள்ளார்.[9] இவர் பள்ளிகள், நிறுவனங்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார்.
வோய்சிச் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார். இவருடைய முதல் புத்தகமான, லைப் வித் அவுட் லிமிப்ஸ்(Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life)[10] 2010-ம் ஆண்டு வெளியானது. பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில் செய்யும் செயல்களை லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார். இதனுடைய இரண்டாம் பாகம், பிரிஸ்பேனில் உள்ள ஒரு தேவாலயத்தில் படமானது; இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும். இளைஞர்களுக்காக, நோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ் (No Arms, No Legs, No Worries: Youth Version) என்ற தொகுப்பினையும் வெளியிட்டார்.[11]
மார்ச் 2008, பாப் கம்மிங்கிசுடன், 20/20 என்ற அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணலில் பங்குபெற்றார். இவர் தி பட்டர்பிளை சர்க்கஸ் என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார், அது 2009-ம் ஆண்டு டோர்போஸ்ட் திரைப்பட திட்டத்திலும், மெத்தேட் பெஸ்ட் திரைப்பட விழாவிலும், தி பீல் குட் பிலிம் விழாவிலும் (2010) சிறந்த திரைப்படத்திற்கான பரிசு பெற்றது.[12] சம்திங்க் மோர், என்னும் காணொளியை யூடியூபில் வெளியிட்டார்.[13]
இவற்றையும் பார்க்க
[தொகு]- ஸ்டீபன் ஹோக்கிங், இயற்பியலாளர் மற்றும் எழுத்தாளர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Life Without Limbs: About Nick Vujicic". Archived from the original on 12 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 September 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.lifewithoutlimbs.org
- ↑ "Life Without Limbs - News". Archived from the original on 15 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2012-05-20.
- ↑ http://www.cafemom.com/journals/read/1607832/The_doctor_said_your_son_has_no_arms_or_legs.
- ↑ Vance, Daniel J. "Disabilities Week" இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090611084732/http://www.ahherald.com/disabilities/2005/dw050822_limbs.htm. பார்த்த நாள்: 28 September 2009.
- ↑ Riley, Jennifer (30 March 2008). "Limbless Evangelist Preaches Joy In Christ". Christian Post Reporter. http://www.christianpost.com/Ministries/Figures/2008/03/limbless-evangelist-preaches-joy-in-christ-30/index.html. பார்த்த நாள்: 28 September 2009.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-20.
- ↑ "Attitude is Altitude: No Arms, No Legs, No Worries". Archived from the original on 14 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 28 September 2009.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [2]
- ↑ http://www.thedoorpost.com/hope/The%20Butterfly%20Circus
- ↑ Something More (YouTube)
வெளி இணைப்புகள்
[தொகு]- Music Video "Something More"
- Life Without Limbs
- Attitude is Altitude பரணிடப்பட்டது 2010-06-16 at the வந்தவழி இயந்திரம்
- An inspirational movie was created around Nick Vujicic called "The Butterfly Circus"
- Video Interview with Nick