உள்ளடக்கத்துக்குச் செல்

நா. புகழேந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா. புகழேந்தி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
12 மே 2021 – 6 ஏப்ரல் 2024
முன்னையவர்ஆர். முத்தமிழ்செல்வம்
பின்னவர்காலியிடம்
தொகுதிவிக்கிரவாண்டி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிமுக

நா. புகழேந்தி (N. Pugazhenthi, இறப்பு: 6 ஏப்ரல் 2024)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், அத்தியூர் திருவாதித்தினைச் சார்ந்த புகழேந்தி உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியினைக் கற்றுள்ளார்.[2] திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த புகழேந்தி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வியுற்றார்.[3] பின்னர் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] புகழேந்தி விழுப்புரம் மத்திய மாவட்ட, திமுக மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.[5]

தேர்தல்களில் போட்டி

[தொகு]
தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு % இரண்டாவது இரண்டாவது கட்சி இரண்டாவது வாக்கு %
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 விக்கிரவாண்டி திமுக வெற்றி 51.27% ஆர். முத்தமிழ்செல்வம் அதிமுக 39.81%

குடும்பம்

[தொகு]

புகழேந்தியின் மனைவி கிருஷ்ணம்மாள் ஆவார். இந்த இணையருக்கு செல்வகுமார் என்ற மகனும். செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர்.

இறப்பு

[தொகு]

71 வயதான புகழேந்தி உடல்நலக் குறைவால் 6 ஏப்ரல் 2024 அன்று காலமானர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.hindutamil.in/news/tamilnadu/1226811-vikravandi-dmk-mla-pugazhendhi-passes-away-due-to-illness.html
  2. ஜெ.முருகன்,தே.சிலம்பரசன். "` யார் இந்தப் புகழேந்தி?' - விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி!". பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
  3. "இடைத்தேர்தல் முடிவுகள் இனி வரும்கால அரசியலுக்கான நல்ல தொடக்கம்! ராமதாஸ்". nakkheeran (in ஆங்கிலம்). 2019-10-24. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
  4. "Pugazhenthi N(DMK):Constituency- VIKRAVANDI(VILLUPPURAM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
  5. "பொன்முடி இடத்தில் நியமிக்கப்பட்ட புகழேந்தி!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
  6. https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-wickrevandi-dmk-mla-bhujahendi-passed-away--/3594195
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._புகழேந்தி&oldid=3933282" இலிருந்து மீள்விக்கப்பட்டது