நாசிக் திராட்சை
நாசிக் திராட்சை என்பது நாசிக் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை திராட்சை ஆகும். இது " இந்தியாவின் திராட்சை தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது. நாசிக்கில், நாட்டின் மொத்த திராட்சை ஏற்றுமதியில் பாதிக்கும் மேலான பங்களிப்பை வழங்குகிறது.
உற்பத்தி
[தொகு]"இந்தியாவின் திராட்சை தலைநகரம்" என்று அழைக்கப்படும் நாசிக், நாட்டின் முன்னணி திராட்சை உற்பத்தி பகுதியாக உள்ளது.[1][2][3] 2015 நிலவரப்படி சுமார் 1.75 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 20 டன் என்ற அளவில் 10 லட்சம் டன் திராட்சை உற்பத்தி செய்யப்படுகிறது.[2] சுமார் 8,000 ஏக்கரில் திராட்சை ஒயின் வகைகள் பயிரிடப்படுகிறது.[4] நாசிக் மாவட்டத்தில் திராட்சை உற்பத்தி பகுதிகளாக கல்வன், பெயின்ட் இகத்புரி, சின்னார், நிபாத், யோலா, நந்த்கான், சதானா, சுர்கானா, திண்டோரி, மாலேகான் ஆகும்.[5]
ஏற்றுமதி
[தொகு]உலக நாசிக் திராட்சை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 55 சதவீதமாக உள்ளது. இதில் மகாராட்டிரா மாநிலத்தின் பங்கு 75 சதவீதம் ஆகும். நாசிக் திராட்சை ஏற்றுமதி 2003-ல் சுமார் 4,000 டன்னிலிருந்து 2013-ல் 48,000 டன்னாக அதிகரித்தது. 2014-ல் ஏற்றுமதி மேலும் 65,000 டன்களுக்கும் அதிகமாக அதிகரித்தது.[3] ஏற்றுமதியில் பாதி நெதர்லாந்தை சார்ந்துள்ளது. ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் மற்றும் பெல்ஜியம் ஆகியவை அடுத்த முக்கிய இடங்களில் உள்ளன.[6] 2013-14-ல் உருசியாவும் சீனாவும் நாசிக் திராட்சையின் முக்கிய சந்தைகளாக உருவெடுத்தன.[2]
புவிசார் குறிப்பு
[தொகு]நாசிக் திராட்சை 2010-11ஆம் ஆண்டில் புவியியல் சார்ந்த குறியீட்டினைப் பெற்றது. இது பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 கீழ் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pawar, Tushar (21 April 2011). "Nashik grape exports dip 58%". Business Standard. http://www.business-standard.com/article/markets/nashik-grape-exports-dip-58-111042100008_1.html. பார்த்த நாள்: 26 January 2016.
- ↑ 2.0 2.1 2.2 Kasabe, Nanda (23 January 2014). "Nashik grape exports set to increase as farmers go after juicier returns". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
- ↑ 3.0 3.1 Kasabe, Nanda (11 December 2015). "India's grape growers expect record exports this season". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
- ↑ Pawar, Tushar (17 September 2015). "Grape-growers' body imports five varieties of table grapes in Nashik". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
- ↑ Chitnis, Paresh. "Catchment areas of market: Showing the details of catchment areas of market of grapes in leading states". Apeda.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 Dec 2017.
- ↑ Pawar, Tushar (28 March 2014). "Grape exports rise in district". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
- ↑ "State Wise Registration Details of G.I Applications" (PDF). Geographical Indication Registry. p. 5. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.