உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லம்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லம்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
636807

நல்லம்பள்ளி (Nallampalli) என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும்.[1][2] நல்லம்பள்ளி நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

[தொகு]

நல்லம்பள்ளி சேலத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும், மாவட்ட தலைநகரமான தர்மபுரியிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7லில் அமைந்துள்ளது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 32 பஞ்சாயத்து கிராமங்கள் அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1613 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7079 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3523 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3556 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 72.7 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-09-02.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2013-09-02.
  3. http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Nallampalli/Nallampalli
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லம்பள்ளி&oldid=4247991" இலிருந்து மீள்விக்கப்பட்டது