நரசிம்மதேவன்
Appearance
நரசிம்மதேவன் | |
---|---|
மிதிலையின் அரசன் | |
ஆட்சி | பொது ஊழி 1174-1227 |
முன்னிருந்தவர் | கங்கதேவன் |
பின்வந்தவர் | இராமசிம்மதேவன் |
மரபு | கர்னாட் வம்சம் |
நரசிம்மதேவன் (Narsimhadeva) மிதிலைப் பிரதேசத்தின் கர்னாட் வம்சத்தின் மூன்றாவது மன்னராவார். கங்கதேவனுக்குப் பிறகு பொது ஊழி 1174 இல் இவர் ஆட்சிக்கு வந்தார் பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.[1]
ஆட்சி
[தொகு]மைதிலிக் கவிஞரான வித்தியாபதி, நரசிம்மதேவனை "சத்யவீரன்" என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் இவரது ஆட்சி அவ்வளவு கொந்தளிப்பாக இருந்தது. இவர் தனது உறவினர்களான நேபாள மன்னருடன் மோதலில் ஈடுபட்டார். துக்ரால் துகன் கானுக்கு எதிராகவும் இவர் எதிர்ப்பைக் காட்டினார். இவர் வங்காள ஆளுநராக இருந்த இவாசு கல்ஜியுடனும் மோதலில் ஈடுபட்டார். இவர் மிதிலையின் மீது ஒரு போரைத் தொடங்கினார். மேலும், கர்னாட்டர்களை கப்பம் செலுத்த கட்டாயப்படுத்துவதில் வெற்றி பெற்றார்.[2] இவரது ஆட்சிக் காலத்தில் மிதிலையின் மீது முஸ்லிம் படையெடுப்புகள் இருந்திருக்கலாம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ CPN Sinha (1970). "Decline of the Karnatas of Mithila". Proceedings of the Indian History Congress 32: 79–84.
- ↑ Mishra, Vijaykanta (1979). Cultural Heritage of Mithila. Mithila Prakasana. p. 58. பார்க்கப்பட்ட நாள் 5 August 2020.
- ↑ Choudhary, Radhakrishna (1970). History of Muslim rule in Tirhut, 1206-1765, A.D. (in ஆங்கிலம்). Chowkhamba Sanskrit Series Office. p. 26.