உள்ளடக்கத்துக்குச் செல்

நரசாபுரா தொழிற்பேட்டைப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரசாபுரா தொழிற்பேட்டைப் பகுதி (Narasapura Industrial Area) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், நர்சாபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு பெரிய தொழில்துறை பகுதி ஆகும். இந்த தொழிற்பேட்டை அமைந்துள்ள நரசாபுரம் என்ற பெயரின் பொருள் "புகழுக்குரிய ஊர்" என்பதாகும். இந்தத் தொழிற்பேட்டையானது இந்தியப் பொருளாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.25% பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்பேட்டைப் பகுதி கோலாரில் உள்ள நரசாபுரம் நகருக்கு அருகில் உள்ளது ( வெம்கல் தொழிற்பேட்டைப் பகுதி, நரசாபுரம் தொழிற்பேட்டைப் பகுதி, மாலூர் தொழிற்பேட்டைப் பகுதி). இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்களின் (NIMZs) கீழ் தொழிற்பேட்டைகள் நிறுவப்பட்ட 16 மாவட்டங்களில் கோலார் மாவட்டம் ஒன்றாகும். தேசிய உற்பத்திக் கொள்கையானது (NMP) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கை 25 சதவீதமாக உயர்த்தி, ஒரு தசாப்தத்தில் 100 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. [1]

உள்கட்டமைப்பு

[தொகு]

இப்பகுதியில் தொழிற்பேட்டை துவக்கத்தில் 700.75 ஏக்கர் பரப்பளவில் வளர்த்தெடுக்கபட்டது. இரண்டாம் கட்டமாக கருநாடக தொற்பேட்டைப் பகுதி விளர்ச்சி வாரியச் சட்டத்தின் 28(1) பிரிவின் கீழ் 1,480 ஏக்கரில் தொழிற்பேட்டை அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக, 2,000 ஏக்கர் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொழிற்பேட்டைப் பகுதி தே.நெ-4 இக்கு அருகில் உள்ளது. மேலும் கோலார் நகரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், பெங்களூர் நகரத்திலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் 50 கி.மீ தொலைவில் உள்ள கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்தத் தொழில்துறை பகுதி கோலார் மற்றும் மலூரில் உள்ள 15 தொடருந்து நிலையங்களுடன் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டைப் பகுதியில் பல-வரிசை அணுகல் சாலை, மின்சாரம் வழங்குவதற்கான நிலத்தடி கம்பிவடம், குடிநீர் மற்றும் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீருக்கான இரட்டை நீர் பகிர்மானக் குழாய்கள், தெரு விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன. தற்போதுள்ள துணை மின்நிலையம் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக 32 மெகாவாட் திறண் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழிற்பேட்டையில் 220/66/11 KV துணை மின் நிலையத்தை அமைக்க கருநாடக தொற்பேட்டைப் பகுதி விளர்ச்சி வாரியச்சி வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர, பூங்கா, இடைப்பட்ட மண்டலம், வாகன நிறுத்தம் போன்ற பொதுவான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. [1]

தொடருந்து

[தொகு]

353.45 கோடி ரூபாய் செலவில் ஒயிட்ஃபீல்டு-கோலார் இடையே தொடருந்து பாதை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கும், சரக்கு போக்குவரத்துக்கும் மேலும் உதவும். [2]

சாலைகள்

[தொகு]

இந்த தொழில்துறை மண்டலம் உள்ள பகுதியை உள்ளடக்கி வரவுள்ள சென்னை பெங்களூர் தொழில் நடைபாதையால், தற்போதுள்ள சென்னை பழைய சாலை தே.நெ4 ஆல் ஏற்றுமதிக்காக சென்னை துறைமுகத்துடன் இணைக்கப்படும். மாலூர், ஒயிட்ஃபீல்ட், ஒசகோட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய இடங்களுக்கும் இங்கிருந்து அணுகல் உள்ளது.

தண்ணீர்

[தொகு]

பெங்களூரில் உள்ள பெள்ளந்தூர் ஏரியில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 200 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கோலாரின் தொழில்துறை பகுதிகளுக்கு வழங்கும் யோசனையை மாநில அரசு தீட்டியுள்ளது. [3]

மனிதவளம்

[தொகு]

தொழில்துறை பகுதிகளில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பணிபுரிவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் பட்டியல்

[தொகு]
 • கே.சி.எம் அப்ளையன்சஸ் பிரைவேட் லிமிடெட் (வீட்டு உபயோகப் பொருட்களான அழுத்தக் கலன்: ஒட்டாப் பாத்திரங்கள்: துருவேறா இரும்புப் பாத்திரங்கள் போன்றவை தயாரிக்கபடுகின்றன)
 • மஹிந்திரா ஏரோஸ்பேஸ்: இந்திய மற்றும் பன்னாட்டுச் சந்தைகளுக்கு 2, 4 மற்றும் 6 இருக்கைகள் கொண்ட குடும்ப மற்றும் வணிக விமானங்களை தயாரிக்கிறது
 • ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட்: ஹோண்டா ஆக்டிவ் மற்றும் ஹோண்டா யுவா ஆகிய இரு சக்கர வாகனங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்று
 • ட்ரையம்ப்: பைக்குகள் தயாரிப்பு
 • வால்வோ: பேருந்து உற்பத்தியாளர்கள்
 • பாண்டோ: உள் ஆக்கி கச்சைகள், அதிக வலிமை கொண்ட இரப்பர் தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள்
 • ஸ்கானியா: வோல்வோவுக்கு போட்டியாளராக இருந்து பயணிகள் சொகுசு பேருந்தைத் தயாரிக்கும் வோக்ஸ்வேகன் நிறுவனம்; உயர்தர சரக்குந்துகளையும் உற்பத்தி செய்கிறது
 • எக்சீடி கிளச் இந்தியா லிமிடட்: கிளட்ச் அமைப்புகளை தயாரிக்கிறது
 • லுமாக்ஸ்: வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்கிறது
 • இந்ன்டோ: மின் மற்றும் மின்னணு பொருள் உற்பத்தியாளர்கள்
 • ஆஸ்க் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட்: இரு சக்கர வாகனங்களுக்கான பிரேக் பேனல்கள் மற்றும் உள் ஆக்கு பாகங்களைத் தயாரிக்கிறது
 • வெஸ்டர்ன் இன்போகாம்: இந்திய சந்தைக்கான ஐபோன்களை உற்பத்தி செய்கிறது
 • பராடஸ் பில்ட்கான் பிரைவேட் லிமிடெட்: குடியிருப்பு தளக்கோல உருவாக்குநர்.

பல நிறுவனங்கள் தங்கள் மையங்களை இங்கு விரைவில் அமைப்பதற்காக தொழில்துறை மனைகளை வாங்கியுள்ளன. 

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "16 National Investment and Manufacturing Zones(NIMZS) to Boost Manufacturing Sector". பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
 2. "Railways opens ₹12,000-crore worth projects for private, foreign investment".
 3. Kidiyoor, Suchith (June 21, 2014). "Water from city to revive parched lakes in Kolar" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.