சென்னை பெங்களூர் தொழில் நடைபாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் சென்னை, பெங்களூர் அமைந்துள்ள இடம்

சென்னை- பெங்களூர் தொழில் நடைபாதை திட்டம் ( The Chennai-Bangalore Industrial Corridor Project ) என்பது இந்திய அரசால் வர இருக்கும் ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்த நடைபாதை திட்டத்தில் சென்னை, திருப்பெரும்புதூர், பொன்னப்பன்தங்கல், இராணிப்பேட்டை, சித்தூர், பங்காருபாலம், பலமனேர், பங்காரப்பேட்டை, ஒசகோட்டே, பெங்களூர் ஆகிய பகுதிகள் அடங்குகின்றன. இதனால் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகத்திற்கு இந்த இடங்களில் இருந்து பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதின் மூலம் தென் இந்தியா மற்றும் கிழக்கு ஆசியாவுக்கு இடையிலான வணிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத்தரம்வாய்ந்த இணைப்பு[தொகு]

தனது நிதிநிலை அறிக்கை உரையில், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்த திட்டம் சப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) உதவியுடன், மூன்று தென் மாநில அரசாங்கங்களுடன் இணைந்து உருவாக்கியது என்றார். சென்னை-பெங்களூர் தொழில்துறை நடைபாதை என்பது $ 100 பில்லியன் மதிப்பிலான தில்லி-மும்பை (DMIC) தொழில்துறை நடைபாதையின் மாதிரியாக வருகிறது என்றார்.

"சென்னை நடைபாதையால் கர்நாடக தொழில்களுக்கு மிகுதியான நன்மை இருக்காது, காரணம் அது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு (சென்னை) உலக வர்க்கம் இணைப்பு வழங்குகிறது.. எனினும், அரபிக் கடற்கரையில் உள்ள மும்பை துறைமுகத்திற்கு நடைபாதையை, ஏற்படுத்தி இணைப்பு வழங்கினால் கர்நாடக வட மாவட்டங்களுக்கு பொருளாதார ரீதியாக பெரிய அளவில் நன்மை ஏற்படும் என இந்திய தொழில் கூட்டமைப்பின், கர்நாடக மாநிலக் கவுன்சில் தலைவர் ( சிஐஐ) எல். கிருஷ்ணன் கூறினார்.[1]

இரண்டு முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள் நடைபாதையின் முதுகெலும்பாக உருவாக்கப்பட உள்ளன. தொடர்வண்டி மற்றும் சாலை போக்குவரத்து வழியாக சரக்குகளை கொண்டு செல்லும் வகையில் இந்த நடைபாதை மேம்படுத்தப்படும்.

நீட்டிப்பு[தொகு]

இந்த நடைபாதையை மங்களூர்வரை நீட்டிப்பதன் வழியாக கிழக்கு கடற்கரைத் துறைமுகம் மற்றும் மேற்கு கடல்துறைமுகப்பட்டினமும் சாலை போக்குவரத்தில் இணைக்க வாய்ப்பிருப்பதாக இந்த திட்டத்தை கர்நாடக அரசு முன்மொழிந்துள்ளது. இந்த புதிய திட்டம் உருவாக்கப்படுவதால் இந்த வளாகத்தின் இரு முனைகளிலும் துறைமுகங்களும், மேலும் வழியில் மூன்று பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் இணைப்பும் ஏற்படும் என்றும் இந்த பாதைக்கு இடையே உள்ள உற்பத்தி தொழிற்சாலைகள் அமைப்பு, மங்களூரில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோகெமிக்கல் வளாகம், பன்னாட்டு சரக்கு வானூர்தி வசதி, சர்வதேச விமான நிலையம், முக்கிய துறைமுகம், இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் மிக்க ஒரு பகுதியாக உள்ளதன்மை. ஆகியவற்றின் காரணமாக மங்களூர் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தற்கும் சப்பானிய நிறுவனங்களுக்கு முக்கிய ஏற்றுமதி மையமாக இருக்க முடியும். என கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]