உள்ளடக்கத்துக்குச் செல்

ஒசகோட்டே

ஆள்கூறுகள்: 13°04′N 77°48′E / 13.07°N 77.8°E / 13.07; 77.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசகோட்டே
நகரம்
ஒசகோட்டே is located in கருநாடகம்
ஒசகோட்டே
ஒசகோட்டே
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹோஸ்கோட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°04′N 77°48′E / 13.07°N 77.8°E / 13.07; 77.8
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெங்களூரு ஊரகம்
ஏற்றம்
891 m (2,923 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்56,980
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
562 114
தொலைபேசி குறியீடு91-80
வாகனப் பதிவுKA-53
இணையதளம்http://www.hosakotecity.mrc.gov.in

ஒசகோட்டே அல்லது ஹொசகோட்டே (Hoskote) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஊரக மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு 23 வார்டுகள் கொண்ட ஒசகோட்டே நகராட்சி உள்ளது. ஒசகோட்டே நகரம், பெங்களூருக்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

வரலாறு

[தொகு]

மராத்தியப் பேரரசின் படைகளுக்கும், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளுக்கும், முதலாம் ஆங்கிலேய மைசூர் போரின் தொடர்ச்சியாக ஒசகோட்டே நகரத்தில் 22-23 ஆகஸ்டு 1768 அன்று போர் நடைபெற்றது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

23 வார்டுகள் கொண்ட ஒசகோட்டே நகராட்சியின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 56,980 ஆகும். அதில் ஆண்கள் 29,261 ஆகவும்; பெண்கள் 27,719 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 956 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.22%% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6825 ஆகவுள்ளனர்.[1] ஹோஸ்கோட் மக்கள்தொகையில் இந்துக்கள் 74.86% ஆகவும், இசுலாமியர்கள் 22.24% ஆகவும், கிறித்தவர்கள் 2.30% ஆகவும், மற்றவர்கள் 0.60% ஆகவும் உள்ளனர். இங்கு கன்னடம் மற்றும் தமிழ் மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசகோட்டே&oldid=3806285" இலிருந்து மீள்விக்கப்பட்டது