நயாரா நூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயாரா நூர்
பிறப்பு3 நவம்பர் 1950
குவகாத்தி, அசாம், இந்தியா[1]
பிறப்பிடம்பாகிஸ்தானியர்
இசை வடிவங்கள்கஸல் பாடகர், திரைப்படப் பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்1971–2012

நயாரா நூர் (அசாமிய மொழி নেয়াৰ নূৰ , உருது: نیرہ نور ) பாகிஸ்தானிய பின்னணி பாடகர்,ஆவார் இவர் தெற்காசியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணி பாடகி மற்றும் மேடை இசைக் கலைஞராக கருதப்படுகிறார். பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் நேரடி கஜல் பாடும் இசை நிகழ்ச்சிகளிலும் அல்லது நாட்டின் கச்சேரி அரங்குகளிலும் இசை நிகழ்ச்சிகளை இவா் நிகழ்த்துவார். முக்கியமாக 1971 முதல் 2012 வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

நயாரா நூர் 1950 ல் வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தலைநகர் குவஹாத்தியில் பிறந்தார், மேலும் தனது குழந்தை பருவத்தை அங்கேயே கழித்தார். அவரது குடும்பம் மற்றும் மூதாதையர்கள், ஒரு வணிகப் பாரம்பரியத்ததை சேர்ந்தவர்களாவர். பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸிலிருந்து குடிபெயர்ந்து அஸ்ஸாமில் நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றனர். [2] அவரது தந்தை அகில இந்திய முஸ்லீம் லீக்கின் தீவிர உறுப்பினராக இருந்தார், மேலும் 1947 இல் பிரிவினைக்கு முன்னர் அஸ்ஸாம் பயணத்தின் போது பாகிஸ்தானின் ஸ்தாபக தந்தை முஹம்மது அலி ஜின்னாவிற்கு விருந்தளித்தார். 1957 அல்லது 1958 ஆம் ஆண்டில், நூர் தனது தாய் மற்றும் உடன்பிறப்புகளுடன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து கராச்சியில் குடியேறினார். இருப்பினும், குடும்பத்தின் அசையா சொத்துக்களைக் கவனிக்க அவரது தந்தை 1993 வரை அசாமில் தங்கியிருந்தார். தான் குழந்தையாக இருந்த போது கனன் தேவி மற்றும் கம்லாவின் பஜனைகள் மற்றும் பேகம் அக்தரின் கஜல்கள் மற்றும் தும்ரிஸ் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்..

இசை வாழ்க்கை[தொகு]

நயாராவுக்கு முறையான இசை பின்னணியோ முறையான பயிற்சியோ இல்லை என்றாலும், 1968 ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள தேசிய கலைக் கல்லூரியின் ஆண்டுவிழா விருந்து நிகழ்வில் தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக பாடுவதைக் கேட்டபின் இஸ்லாமியா கல்லூரி பேராசிரியர் இஸ்ரார் என்பவரால் இவரது பாடல் திறமை கண்டறியப்பட்டது. விரைவில், பல்கலைக்கழகத்தின் ரேடியோ பாக்கிஸ்தான் நிகழ்ச்சிகளுக்காக அவர் பாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

1971 ஆம் ஆண்டில், நயாரா தனது பாடல்களை பாகிஸ்தான் தொலைக்காட்சி தொடர்களிலும் பின்னர் கரானா (1973) மற்றும் டேன்சன் போன்ற திரைப்படங்களில் இருந்து தொடங்கினார். பின்னர் அவர் பிரபல கவிஞர்களான காலிப் மற்றும் பைஸ் அகமது பைஸ் ஆகியோரால் எழுதப்பட்ட கஸல்களைப் பாடியுள்ளார், மேலும் மெஹ்தி ஹாசன் மற்றும் அகமது ருஷ்டி போன்ற ஜாம்பவான்களுடன் அவர் பாடியுள்ளார். அவர் அனைத்து பாகிஸ்தான் இசை மாநாட்டில் மூன்று தங்கப் பதக்கங்களையும், கரானா (1973) திரைப்படத்தில் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான நிகர் விருதையும் வென்றுள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள கஜல் பிரியர்களிடையே எண்ணற்ற மெஹ்பில்ஸ் மற்றும் முஷைராக்களில் அவர் தொடர்ச்சியாகப் பாடியுள்ளார் .ரேடியோ பாகிஸ்தானின் உருது நாட்ஸ் மற்றும் கஜல்களின் புகழ்பெற்ற கவிஞர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான பேஸாட் லக்வானி எழுதிய “ஏ ஜஸ்பா-ஏ-தில் கார் மெய்ன் ஜகூன்” என்ற பாடலே நயாரா நூரின் சிறந்த புகழ்பெற்ற கஸல் பாடலாகும். . நயாரா நூர் பின்னர் இந்த கஸல் பாலுக்காக பல விருதுகளை வென்றார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஷேர்யார் சைதி என்பவரைத் திருமணம் செய்த நயாராவுக்கு ஜாபர் சைதி மற்றும் நாட்-இ-அலி என்ற இரு மகன்கள் உள்ளனர். இளையமகன் ஜாபர் சைதி “காவிஷ் இசைக் குழுவில்” முக்கிய பாடகராகவும் மூத்த மகன் நாட்-இ-அலி தனிப் பாடகராகவும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Noorani, Asif (30 November 2012). "Nayyara Noor: muted melodies". Dawn. http://www.dawn.com/news/767855/nayyara-noor-muted-melodies. பார்த்த நாள்: 30 May 2017. 
  2. Amjad Parvez (9 November 2018), "Nayyara Noor — a haunting, tuneful and sweet voice", The Daily Times. Retrieved 20 January 2019.
  3. https://www.youtube.com/watch?v=FPwXc_uNFhA, Nayyara Noor's super-hit ghazal on YouTube, Retrieved 30 May 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயாரா_நூர்&oldid=2935802" இலிருந்து மீள்விக்கப்பட்டது