நன்னே சோடர்
நன்னே சோடர் (Nanne Choda, தெலுங்கு: నన్నె చోడుడు ; 12 ஆம் நூற்றாண்டு ) என்பவர் ஒரு பிரபலமான தெலுங்கு கவிஞர் மற்றும் தெலுங்கு சோடர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தேக்கண்டியுடு மற்றும் கவிராஜா சிகமணி ஆகிய பட்டங்களைக் கொண்டிருந்தார். [1] இவர் பிரபந்தத்தை முதலில் பாடியவராக கருதப்படுகிறார். [2]
வரலாறு[தொகு]
இவரது படைப்புகளின் மூலமாக இவரது தாயார் பலநாட்டின் ஹைஹயாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தக் குடும்பத்தினர் வேலநாட்டி சோடர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. இவர் தனது படைப்புகளை சைவ துறவியான ஜங்காம மல்லிகார்ஜுண யோகிக்கு அர்ப்பணித்தார்.
படைப்புகள்[தொகு]
நானே சோடரின் புகழ்பெற்ற படைப்பு தெலுங்கில் குமார சம்பவம் ஆகும். இந்தப் படைப்பு 10 ஆம் நூற்றாண்டில் நன்னய்யாவின் மகாபாரதத்திற்கு முன்பே இயற்றப்பட்டதாக சிலர் நம்புகிறார்கள். மற்றவர்கள் நன்னய்யாவிற்கும் திக்கனா காலத்திற்கும் இடைப்பட்டது என்கின்றனர். குமார சம்பவம் என்பது அதே பெயரில் உள்ள காளிதாசன் படைப்பின் மொழிபெயர்ப்பு அல்ல. ஆனால் நன்னே சோடர் காளிதாசனின் படைப்புகளிலிருந்தும், சைவ இலக்கியங்களின் பிற கதைகளிலிருந்தும் உத்வேகம் பெற்றுள்ளார். இவர் தனது படைப்பை தனது குருவாக இருந்த ஜங்காம மல்லிகார்ஜுனாவுக்கு அர்ப்பணித்துள்ளார். [1]
பாணி[தொகு]
இவர் பிரபந்த பாணியின் முதல் எழுத்தாளர் மற்றும் ஸ்ரீநாதா மற்றும் அஷ்டதிகாஜாக்களை விட முந்தையவர். சமசுகிருதம் மற்றும் தெலுங்கு சொற்களின் கலவையை இவர் பயன்படுத்தியிருந்தார். இவர் தெலுங்கு மரபுத்தொடரில் தலைசிறந்தவர் ஆவார். இயற்கையை விவரிக்கும் இவரது சில கவிதைகள் மிகவும் பிரபலமானவை. இவர் தெலுங்கு இலக்கியத்தில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தினார். இவர் தனது படைப்புகளில் சுகாவி ஸ்தூதி (நல்ல கவிஞர்களைப் புகழ்வது), குகாவி நிந்தா (கெட்ட கவிஞர்களைக் குறை கூறுவது) மற்றும் இஷ்டாதேவா பிரார்த்தனா (பிடித்த கடவுளைப் புகழ்வது) போன்ற கவிதைகளை எழுதியுள்ளார்.
கன்னடம் மற்றும் தமிழ் சொற்களை தனது கவிதைகளில் பயன்படுத்திய முதல் தெலுங்கு கவிஞர் நன்னே சோடர் ஆவார். [3]
குறிப்புகள்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- துர்கா பிரசாத், கி.பி 1565 வரை ஆந்திராவின் வரலாறு, பி.ஜி. வெளியீட்டாளர்கள், குண்டூர் (1988)
- குமார சம்பவமு - நன்னேச்சோத தேவக்ருதம்