திக்கனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திக்கன சோமயாஜி
புனைபெயர் திக்கனா
இனம் சைவம்
இலக்கிய வகை கவி
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஆந்திர மகாபாரதம்

திக்கன சோமயாஜி அல்லது திக்கனா (தெலுங்கு: తిక్కన్న) (1220 - 1300) பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதிய மூவருள் இரண்டாமவர்.[1] முதலில் எழுதிய நன்னய்யா முதல் இரண்டரைப் பருவங்களைத் தான் மொழிபெயர்த்திருந்தார். அதுவும் வடமொழி மிகுதியுடன் இருந்தது. திக்கனா மூன்றாம் பருவம் தொடங்கிப் பதினெட்டாம் பருவம் வரைக்கும் எழுதினார். மூன்றாமவரான எர்ரண்ணா முழு பாரதத்தையும் எழுதினார்.

திக்கனா நெல்லூர் அரசரான மனுமசித்தியின் அரசவைக் கவியும் அமைச்சருமாவார். மகாபாரதம் எழுதும் முன்னர் சோமவேள்வியை நடத்தியவராதலால் சோமயாஜி என அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)". (1) 5. (1992). Ed. மோகன் லால். பக்கம் 4351: சாகித்ய அகாதமி. அணுகப்பட்டது அக்டோபர் 20, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்கனா&oldid=3463245" இருந்து மீள்விக்கப்பட்டது