நந்தினி முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் நந்தினி முகர்ஜி
பிறப்புநந்தினி முகோபாத்யாய்
தேசியம் இந்தியா
துறைஇணைய உலகம்
கம்பியில்லா இணைய வலையமைப்பு]]s
மேகக் கணிமை
இணைக் கணிப்பீடு
பணியிடங்கள்ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
கல்விகமலா மகளி உயர்நிலைப்பள்ளி
பத்தா பவன், கொல்கத்தா
கல்வி கற்ற இடங்கள்வங்காள பொறியியல் கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகம்
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
மான்செஸ்டர் பல்கலைக்கழகம் (முனைவர் பட்ட ஆராய்ச்சி)
ஆய்வேடுOn the effectiveness of feedback-guided parallelisation (1999)
ஆய்வு நெறியாளர்ஜான் குர்த்

நந்தினி முகர்ஜி (Nandini Mukherjee) என்கிற நந்தினி முகோபாத்யாய் இந்தியாவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானியும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்தியாவின் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையிலும், பொறியியல் துறையிலும் பேராசிரியராக உள்ளார்.

கல்வி[தொகு]

நந்தினி முகர்ஜி கமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கொல்கத்தா பதா பவன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். 1987இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள சிப்பூர், வங்காள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலிலும், தொழில்நுட்பத் துறையிலும் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், இவர் சிலகாலம் ஓஆர்ஜிசிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1991ஆம் ஆண்டில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்றார். 1996ஆம் ஆண்டில், இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியிலிருந்து இவரது இணைக் கணிப்பீடு முனைவர் ஆராய்ச்சிக்கு மதிப்புமிக்க பொதுநலவாய உதவித்தொகை வழங்கப்பட்டது. 1999ல் தனது ஆராய்ச்சியை முடித்தார்.[1]

தொழிலும் ஆராய்ச்சியும்[தொகு]

முகர்ஜி, தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் இடது முன்னணி பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் கல்லூரி நாட்களிலேயே இந்திய மாணவர் கூட்டமைப்பில் ஈடுபட்டார். பின்னர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மன்றம் மற்றும் விக்யான் சங்கம் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவுக்கான இயக்கத்துடன் தொடர்பு கொண்டார்.

இவர் மேற்கு வங்க இலவச மென்பொருள் சங்கத்தின் செயலாளராக உள்ளார். இவர் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தில் தீவிரமாக உள்ளார் . மேலும், அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமை அமைப்பின் மாநில செயலக உறுப்பினராக உள்ளார். 2011இல் பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

1987ஆம் ஆண்டில் சிப்பூரில் உள்ள வங்காள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு, ஓஆர்ஜி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளராக சேர்ந்தார். இவர், 1992இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் கற்பிக்கத் தொடங்கினார். 2016 வரை இவர் பல்கலைக்கழகத்தின் மொபைல் கம்ப்யூட்டிங் பள்ளியின் இயக்குநராக இருந்தார்.[2] பல முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

2001 இல் இவர், இங்கிலாந்தின் நியூகேசில் பல்கலைக்கழகத்திற்கு மீத்திறன் கணினி ஆராய்ச்சிக்கு சென்றார். அங்கு இவர் 80க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

இந்திய அரசின் பல்வேறு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி திட்டங்களை இவர் மேற்பார்வையிட்டார். முகர்ஜி இந்திய கிராமப்புற சுகாதார அமைப்புகளுக்கு மொபைல் கம்ப்யூட்டிங் மற்றும் கம்பியில்லா இணைய சேவை வலையமைப்புகளின் பயன்பாட்டை ஆராய ஒரு கூட்டு ஆராய்ச்சி திட்டத்தை வழிநடத்துகிறார்.

சமூக நடவடிக்கைகள்[தொகு]

முகர்ஜி மேற்கு வங்கத்தின் இலவச மென்பொருள் மஞ்சாவின் மாநில செயலாளரானார். இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும், மேற்கு வங்கக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தீவிர உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதியாக இருந்தார். அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்திலும் ஈடுபட்டுள்ளார். இவர் அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமை அமைப்பின் மாநில செயலக உறுப்பினராக உள்ளார். 2011இல் பவானிபூர் இடைத்தேர்தலில் இடது முன்னணியான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக இருந்தார். இவர், 2014 மக்களவைத் தேர்தலில் தெற்கு கொல்கத்தா தொகுதியில் இடது முன்னணி பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_முகர்ஜி&oldid=3276105" இருந்து மீள்விக்கப்பட்டது