இணைய உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இணைய உலகம் அல்லது பொருட்களின் இணையம் (Internet of Things, IoT) இயற்பொருட்களின் பிணைப்பாகும் அல்லது "things" மின்னணுவியல், மென்பொருள், உணரிகள் மற்றும் இணைய அணுக்கம் பதிக்கப்பட்ட இயற்பொருட்களின் இணையமாகும். இணைய உலகம் என்பது ஒரு கருத்தாக்கம். இந்த கருத்தாக்கத்தில், உலகிலுள்ள அனைத்து வகையான இயற்பொருட்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைய உலகத்தில், அனைத்து வகையான இயற்பொருட்கள், மனிதர்களிடையே தகவல் பரிமாரிக் கொள்ளப்படுகிறது [1].இவற்றின் மூலமாக தரவுகளைச் சேகரிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இயலும்.[2] இணைய உலகம் வழியே பொருட்களை ஏற்கெனவே உள்ள இணையப் பிணைப்புகள் மூலம் தொலைவிலிருந்து உணரவும் கட்டுப்படுத்தவும் இயலும்.[3] இதனூடாக இயல் உலகிற்கும் கணிமய அமைப்புகளுக்கும் இடையே நேரடி ஒருங்கிணைத்தலை ஏற்படுத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இது திறன் மேம்பாட்டிற்கும் துல்லியத்திற்கும் பொருளியல் ஆதாரத்திற்கும் வழிவகுக்கும். [4][5][6][7][8][9] ஒவ்வொரு பொருளையும் தனிப்பட்டு அடையாளப்படுத்தக் கூடியவகையில் பதிக்கப்படும் மின்னணுவமைப்பு இருக்கும்; இவை தற்போது செயற்பாட்டிலுள்ள இணையக் கட்டமைப்புடன் ஒழுங்குபடுத்தப்படும். 2020 ஆண்டுவாக்கில் 50 பில்லியன் பொருட்கள் இணைய உலகில் பங்கேற்கும் என அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.[10] சந்தையின் மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2015-09-22 அன்று பரணிடப்பட்டது.
 2. "Internet of Things Global Standards Initiative". ITU. பார்த்த நாள் 26 June 2015.
 3. https://hbr.org/resources/pdfs/comm/verizon/18980_HBR_Verizon_IoT_Nov_14.pdf
 4. http://www.internet-of-things-research.eu/pdf/Converging_Technologies_for_Smart_Environments_and_Integrated_Ecosystems_IERC_Book_Open_Access_2013.pdf
 5. http://www.cisco.com/web/solutions/trends/iot/introduction_to_IoT_november.pdf
 6. http://cordis.europa.eu/fp7/ict/enet/documents/publications/iot-between-the-internet-revolution.pdf
 7. http://www.vs.inf.ethz.ch/publ/papers/Internet-of-things.pdf
 8. http://www.cognizant.com/InsightsWhitepapers/Reaping-the-Benefits-of-the-Internet-of-Things.pdf
 9. "The Supply Chain: Changing at the Speed of Technology". பார்த்த நாள் 2015-09-18.
 10. Dave Evans (April 2011). "The Internet of Things: How the Next Evolution of the Internet Is Changing Everything". Cisco. மூல முகவரியிலிருந்து 6 செப்டம்பர் 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 September 2015.
 11. Toptal - முகப்பு ஸ்மார்ட் ஹோம்: திங்ஸ் இன் தி இன்டர்நேஷனல் ஆஃப் தி திங்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_உலகம்&oldid=3233566" இருந்து மீள்விக்கப்பட்டது