உள்ளடக்கத்துக்குச் செல்

நதியா நதிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நதியா நதிம் (Nadia Nadim) (பிறப்பு 2 சனவரி 1988) இவர் ஆப்கானித்தானைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆவார். இவர் அமெரிக்காவின் கரோலினா கால்பந்து அணிக்காகவும் டென்மார்க் தேசியக் கால்பந்து அணிக்காகவும் முன்கள வீரராக விளையாடுகிறார். நதிம் எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க குறிப்பாக பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் அணியுடன் 2020-21 பருவத்தில் பிரெஞ்சு லீக் பட்டத்தை வென்றதால் சிறந்த ஆப்கானிய பெண் கால்பந்து வீரராக கருதப்படுகிறார்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்

[தொகு]

நதிம், ஆப்கானித்தானில் எறாத்து நகரில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை, ஆப்கானித்தான் தேசிய இராணுவத் தளபதியாக இருந்தார். இவர் தாலிபான்களால் 2000இல் தூக்கிலிடப்பட்டார்.[2] பின்னர் இவரது குடும்பம் டென்மார்க்கிற்கு தப்பிச் சென்றது. அங்கு இவர் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். ஆல்போர்க் பி 52 அணிக்காகவும் விபோர்க் அணிக்காகவும் விளையாடினார்.[3] [4] [5]

விளையாட்டு வாழ்க்கை

[தொகு]

ஆரம்ப காலம்

[தொகு]

இவரது குடும்பம் டென்மார்க்கிற்கு தப்பிச் சென்ற பிறகு, இவர் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். பி 52 ஆல்போர்க் அணி, 2005 முதல் 2006 வரை விபோர்க் அணி, ஐ.கே ஸ்கோவ்பாக்கன் போன்ற அணிகளுக்காக 2006 முதல் 2012 வரை விளையாடினார்.[6] அதே ஆண்டு செப்டம்பரில் இவர் தனது வாகையாளர் தொடர் போட்டியின் மூலம் அறிமுகமானார். இசுகொட்லாந்து வாகையாளர் போட்டியில் கிளாஸ்கோ சிட்டி அணியை 2-1 என்ற கணக்கில் வென்றார்.

நதிம் தன சக வீரர்களான கிளிங்கன்பெர்க் & லிண்ட்சே ஹோரனுடன் ஒரு கோலைக் கொண்டாடுகிறார்.

ஸ்கை புளூ கால்பந்து அணி

[தொகு]

நாடிம் 2014இல் ஸ்கை புளூ கால்பந்து அணியில் சேர்ந்தார். 6 ஆட்டங்களில் விளையாடி, இவர் 7 கோல்களை அடித்தார். இவர் ஆகத்து 19 அன்று வாரத்தின் வீராங்கனையாகவும், ஆகத்து 14 அன்று மாதத்தின் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 பிப்ரவரி 2015 அன்று, ஸ்கை புளூ 2015ம் வருடத்தில் தங்கள் அணிக்காக விளையாட இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவித்தது. [7]

விருதுகளும் அங்கீகாரமும்

[தொகு]

சூலை 2019 இல், சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்விக்கான யுனெஸ்கோ வாகையாளாராக நதியா நதிம் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டு மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் இவரது பங்களிப்புக்காகவும், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அமைப்பின் கல்வி நடவடிக்கை மற்றும் சர்வதேச அளவில் சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்விக்காக வாதிடுவதிலும் இவரது பங்களிப்புக்காக இவர் இந்த அங்கீகாரத்தைப் பெற்றார்.[8]

சொந்த வாழ்க்கை

[தொகு]

நதிம் தன்னுடைய விளையாடும் நாட்கள் முடிந்ததும் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆருஹஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் பயின்றார் (கால்பந்து விளையாடும் நேரம் போக) . [9] [10] 2020 ஆம் ஆண்டில், இவர் உதவி அறுவை சிகிச்சை நிபுணரானார். [11]

முஸ்லீமான நதிம் [12] மேலும் ஒன்பது மொழிகளைப் பேசுகிறார்.[13] ஆப்கான் பாடகி ஆர்யானா சயீத் இவருடைய அத்தையாவார். 2018 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் அவர்களின் "சர்வதேச விளையாட்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்" பட்டியலில் 20 வது இடத்தை இவரை வைத்தது. [14]

2018 ஆம் ஆண்டில், டென்மார்க் வெளியீட்டு நிறுவனம் [15] இவரது சுயசரிதையை வெளியிட்டது. இந்த புத்தகம் ஆண்டின் விளையாட்டு புத்தகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த புத்தகம் பிரெஞ்சு வெளியீட்டாளர் ஹச்செட் புத்தகக் குழு மூலம் மே 26, 2021 அன்று பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது. [16]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நதியா நதிம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Nadia Nadim da fuga aos talibãs ao Paris SG". Record (in போர்ச்சுகீஸ்). 4 January 2019. பார்க்கப்பட்ட நாள் 9 January 2019.
  2. Muslim women and sport.
  3. "Nadia Nadim" (in டேனிஷ்). Danish Football Association. Archived from the original on 28 June 2013. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.
  4. "Nadia Nadim Fled Afghanistan. Now She's a Portland Thorns Forward and a Medical Student.". https://www.pdxmonthly.com/articles/2017/4/17/nadia-nadim-fled-afghanistan-now-she-s-a-portland-thorns-forward-and-a-medical-student. 
  5. McRae, Donald (2020-04-27). "PSG's Nadia Nadim: 'I know the value of helping a person when they have no hope'". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.
  6. "Nadia Nadim". UEFA.com. ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம். 27 September 2012. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.
  7. "Sky Blue Signs Nadia Nadim for 2015 Season", பரணிடப்பட்டது 11 மே 2019 at the வந்தவழி இயந்திரம், accessed 11 March 2015
  8. "UNESCO education and gender equality".
  9. "Nadia Nadim" (in டேனிஷ்). Danish Football Association. Archived from the original on 28 June 2013. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013."Nadia Nadim" (in Danish).
  10. "Nadia Nadim Fled Afghanistan. Now She's a Portland Thorns Forward and a Medical Student.". Portland Monthly. 17 April 2017. https://www.pdxmonthly.com/articles/2017/4/17/nadia-nadim-fled-afghanistan-now-she-s-a-portland-thorns-forward-and-a-medical-student. Best, Katelyn (17 April 2017).
  11. McRae, Donald (2020-04-27). "PSG's Nadia Nadim: 'I know the value of helping a person when they have no hope'". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.McRae, Donald (27 April 2020).
  12. . 17 April 2017. https://www.pdxmonthly.com/articles/2017/4/17/nadia-nadim-fled-afghanistan-now-she-s-a-portland-thorns-forward-and-a-medical-student. Best, Katelyn (17 April 2017).
  13. "The Afghan refugee and trainee surgeon who can speak nine languages – and has just signed for Manchester City" (in ஆங்கிலம்). Manchester Evening News. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.
  14. Alana Glass (27 March 2018). "The Most Powerful Women In International Sports 2018". Forbes.
  15. "Nadia Nadim - Min historie | Miriam Zesler, Nadia Nadim | Politikens Forlag". www.politikensforlag.dk (in டேனிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
  16. "Nadia Nadim - Mon histoire (Sports)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியா_நதிம்&oldid=3359449" இலிருந்து மீள்விக்கப்பட்டது