நசாத் வெலு பெல்காசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசாத் வெலு பெல்காசம்
Ministry of National Education (France)
In office
26 August 2014 – Current
சனாதிபதிபிரான்சுவா ஆலந்து
பிரதமர்Manuel Valls
முன்னையவர்Benoît Hamon
Minister of Women's Rights, Minister of City Affairs, Minister of Youth Affairs and Sports
In office
2 April 2014 – 25 August 2014
சனாதிபதிபிரான்சுவா ஆலந்து
பிரதமர்Manuel Valls
முன்னையவர்herself (Women's Rights)
François Lamy (City Affairs)
Valérie Fourneyron (Sports)
பின்னவர்Marisol Touraine (Women's Rights)
Patrick Kanner (City, Youth affairs and Sports)
Minister of Women's Rights
In office
16 May 2012 – 31 March 2014
சனாதிபதிபிரான்சுவா ஆலந்து
பிரதமர்Jean-Marc Ayrault
முன்னையவர்Catherine Vautrin
Government's spokesperson
In office
16 May 2012 – 31 March 2014
சனாதிபதிFrançois Hollande
பிரதமர்Jean-Marc Ayrault
முன்னையவர்Valérie Pécresse
பின்னவர்Stéphane Le Foll
Conseillère générale of the Rhône department
பதவியில்
In office
16 March 2008
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புMinister of Education, Higher Education and Research
4 அக்டோபர் 1977 (1977-10-04) (அகவை 46)
Rif , Bni Chiker, Nador province, Morocco
இறப்புMinister of Education, Higher Education and Research
இளைப்பாறுமிடம்Minister of Education, Higher Education and Research
தேசியம் Moroccan
French
அரசியல் கட்சிSocialist Party
துணைவர்
Boris Vallaud (தி. 2005)
பிள்ளைகள்Louis-Adel Vallaud
Nour-Chloé Vallaud
பெற்றோர்
  • Minister of Education, Higher Education and Research
முன்னாள் கல்லூரிSciences Po

நசாத் வெலு பெல்காசம் (Najat Vallaud-Belkacem) (அக்டோபர் 4 1977)என்பவர் பிரான்சு நாட்டின் சோசலிசட் கட்சியின் அரசியல்வாதியும், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் திகதி அன்று பிரான்சு நாட்டின் முதல் பெண் கல்வி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டவரும் ஆவார். 2012 மே 16 முதல் 2014 ஆகசுட் 25 ஆம் திகதி வரை மகளிர் விவகார அமைச்சராகவும், 2012 ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் 2014 ஆகசுட் மாதம் 25 ஆம் திகதி வரை நகர நிர்வாக அமைச்சராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் அரசு செய்தித் தொடர்பாளராக 2012 மே மாதம் 16 ஆம் திகதி முதல் 2014 மார்சு 31 ஆம் திகதி வரையும் பதவி வகித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு லியோன் நகரத்தின் கவுன்சிலராக பதவி வகித்தார். மேலும் 2007, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

சுயசரிதை[தொகு]

1977 ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு கட்டிடத் தொழிலாளியின் மகளாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். இவருடைய பாட்டி அல்சீரியா மற்றும் ஸ்பெயின் வம்சாவழியில் வந்தவராவார். இவரின் குடும்பம் வறுமையில் வாடியதால் இவரை 4 வயதிலிருந்து ஆடு மேய்க்கும் [1] வேலைக்கு இவரின் பெற்றோர் அனுப்பிவிட்டனர்.[2] மேலும் வருமை வாட்டவே தென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரான்சு நாட்டிற்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. அங்கு சென்று படித்துக்கொண்டே பகுதிநேரப்பணி செய்து குடும்பத்துற்கு உதவிசெய்து வந்தார். 2002 ஆம் ஆண்டு பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்..[3]

சாதனைகள்[தொகு]

பிரான்சு அரசு 2013 ஆம் ஆண்டு தன்பாலின உறவுகளின் திருமணத்தை ஆதரித்து சட்டம் இயற்றியது. அப்போது இவர் இச்சட்டம் இது ஒரு வரலாற்று முன்னேற்றம் என்று துணிச்சலாக ஆதரித்தார். சமூக வலைத்தளங்கள் வெறுப்பு அரசியலுக்கு உபயோகிக்கிக்கூடாது என்று சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்தார். 2014 ஆம் ஆண்டு பிரான்சு அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் 38 வயதேயான இவருக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. பிறப்பால் இவர் முசுலீமாக இருந்தாலும் இசுலாம் சட்ட திட்டங்களை பெரிய அளவில் கடைப்பிடிக்காதவராகவே இருக்கிறார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Najat Vallaud-Belkacem: From a shepherd girl to minister of education 23 ஏப்ரல் 2016 தி கார்டியன்
  2. ஆடு மேய்த்த சிறுமி இன்று கல்வி அமைச்சர்! தி இந்து தமிழ் செப்டம்பர் 4 2016
  3. "France's new education minister prompts rightwing protests". The Guardian. 27 August 2014. http://www.theguardian.com/world/2014/aug/27/france-education-minister-rightwing-protests-najat-vallaud-belkacem. 
  4. "Muslim Minister in French Government Calls for Twitter to Censor Tweets that Don't Respect Human Rights". பார்க்கப்பட்ட நாள் 24 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசாத்_வெலு_பெல்காசம்&oldid=3850560" இலிருந்து மீள்விக்கப்பட்டது