த. நா. குமாரசாமி
தண்டலம் நாராயண சாசுதிரி குமாரசாமி என்னும் த. நா. குமாரசாமி (T N Kumarasamay) வங்க மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர். இதழாளர்.
பிறப்பும் குடும்பமும்
[தொகு]த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாசுதிரி என்பவருக்கு 1907ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தவர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவர்தம் அண்ணன் ஆவார்.
கல்வி
[தொகு]இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கலை இளவர் (பி.ஏ.) பட்டம் பெற்றார். சமசுகிருதம், தெலுங்கு, வங்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று அவற்றில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார்.
எழுத்துப் பணி
[தொகு]தன் அண்ணன் த. நா. சேனாதிபதியின் தாக்கத்தால் இளம்பருவத்திலே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டார். கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் ஆகியவை உள்ளிட்ட இதழ்களில் கதைகள் எழுதினார். கலைமகள் இதழில் கி. வா. சகந்நாதன், கா. ஸ்ரீ. ஸ்ரீ ஆகியோரோடு பணியாற்றினார்.[1]
பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், தாராசங்கர் பந்தோபாத்தியாய், நேதாசி சுபாசு சந்திர போசு உட்பட பல வங்க மொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
இவருடைய படைப்புகளைத் தமிழக அரசு 2006-07ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது.[2]
நூல்கள்
[தொகு]இவருடைய படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும் பல நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் சில:
சிறுகதைத் தொகுதிகள்
[தொகு]- கன்யாகுமாரி
- குழந்தை மனம்
- சக்தி வேல்
- தேவகி
- மோகினி
- பிள்ளைவரம்
- போகும் வழியில்
- வஸந்தா
- கதைக்கொடி
- அன்னபூரணி
- கதைக் கோவை-3
- கதைக் கோவை-4
- இக்கரையும் அக்கரையும்
- நீலாம்பரி
- சந்திரகிரகணம்
நாவல்கள்
[தொகு]- ராஜகுமாரி விபா
- சந்திரிகா
- இல்லொளி
- மனைவி
- உடைந்தவளையல்
- ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்
- தீனதயாளு
- மிருணாளினி
- இந்திரா
- தேவதாஸ்
- ஸெளதாமினி
- லலிதா
- கானல் நீர்
- அன்பின் எல்லை
- ஒட்டுச்செடி
- வீட்டுப்புறா
மொழிபெயர்ப்பு நூல்கள்
[தொகு]- கோரா – ரவீந்திரநாத் தாகூர்
- புயல் - ரவீந்திரநாத் தாகூர்
- விஷ விருட்சம் – பக்கிம் சந்திரர்
- இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போசு
- ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்தியாய்[3]
- பொம்மலாடம் (புதுல் நாச்சார் கி இதிகதா வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய)
- வினோதினி (இரபீந்திரநாத் தாகூர்)
- யாத்ரீகன்(பிரபோத் குமார் சான்யாஸ்)
திரைத்துறையில்
[தொகு]1940ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் தமிழன் எனப் புகழப்பட்ட அ. கருப்பண் செட்டியார் (ஏ. கே. செட்டியார்) எடுத்த மகாத்மாகாந்தி என்னும் ஆவணப்படத்திற்கு இவர் உரையாடல் எழுதினார்.
வெளிநாட்டுப் பயணம்
[தொகு]1962ஆம் ஆண்டில் தாகூர் அறிஞர் எனச் சிறப்பிக்கப்பட்டார். அதனால் சோவியத் ரஷ்யாவிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.
மறைவு
[தொகு]இவர் 1982ஆம் ஆண்டில் சென்னையில் காலமானார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ கர்ணன் எழுதிய கி.வா.ஜ. முதல் வண்ணதாசன் வரை:20 தமிழ்ப் படைப்பாளிகள்; நர்மதா பதிப்பகம், சென்னை; மு. பதி.சூன் 2011; பக். 24-25
- ↑ த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழா
- ↑ தாரா சங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம்