தைவான் குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைவான் குக்குறுவான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. நச்சாலிசு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் நச்சாலிசு
கெளல்டு, 1863
வேறு பெயர்கள்

மேகாலைமா நச்சாலிசு கெளல்டு, 1863

தைவான் குக்குறுவான் (Taiwan barbet)(சைலோபோகன் நச்சாலிசு), பூத்தையல் குக்குறுவான் என்றும் அழைக்கப்படுவது தைவான் நாட்டில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

தைவான் குக்குறுவான் முன்னர் கரும் புருவ குக்குறுவான் (சைலோபோகன் ஊர்தி) துணையினமாகக் கருதப்பட்டது.[2] பின்னர் இது மெகலைமா சிற்றினத்தில் வைக்கப்பட்டது.[1]

விளக்கம்[தொகு]

தைவான் குக்குறுவான் சுமார் 20 cm (7.9 அங்) நீளமானது. இதன் இறகுகள் பெரும்பாலும் பச்சை நிறத்திலிருக்கும்.[3] முகட்டலகில் சிவப்பு புள்ளி ஒன்று உள்ளது. காது மறைப்புகள் மற்றும் கீழ் மலர் ஆகியவை நீல நிறத்தில் உள்ளன. தொண்டை கடுகு மஞ்சள் நிறமுடையது.[2] மஞ்சள் நெற்றியில் கண்ணுக்கு மேலே ஒரு கருப்பு பட்டை உள்ளது. அலகு கருப்பு நிறத்தில் தடிமனானது.[4] மார்பு பகுதியில் நீல பட்டை மற்றும் சிவப்பு பட்டை உள்ளது.[2] வயிறு மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். பாதங்கள் சாம்பல் நிறத்தில் உள்ளன. ஆண் பெண் பறவையில் பாலின வேறுபாடின்றி ஒரே மாதிரியானவை.[4]

பெயர்[தொகு]

தைவானில், இந்தப் பறவை "ஐந்து நிற பறவை" என்று அழைக்கப்படுகிறது (மரபுவழிச் சீனம்: 五色鳥பின்யின்: Wǔsèniǎo). இதன் இறகுகளில் உள்ள ஐந்து வண்ணங்களை இப்பெயர் குறிக்கிறது. இதன் வண்ணமயமான இறகுகள் மற்றும் அழைப்பு மர மீன் என்று அழைக்கப்படும் ஒரு தாள வாத்தியத்தை ஒத்திருப்பதால், இந்த இனம் "வண்ணமயமான துறவி" என்றும் தைவானியரால்குறிப்பிடப்படுகிறது (மரபுவழிச் சீனம்: 花和尚பின்யின்: Huā Héshàng; தைவானிய ஹொக்கியன் : hue-á huê-siūnn).[5]

வாழ்விடம் மற்றும் சூழலியல்[தொகு]

தைவான் குக்குறுவான் பொதுவாக 2,800 m (9,200 அடி) உயரத்தில் உள்ள காடுகளில் காணப்படுகிறது.[2] இது பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்கிறது. இனப்பெருக்க காலம் மார்ச் முதல் ஆகத்து வரை ஆகும்.[4] இது மரப்பொந்துகளில் கூடு கட்டுகிறது. இது ஏற்கனவே உள்ள பொந்துகளைப் பயன்படுத்தலாம் அல்லது தோண்டலாம்.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Psilopogon nuchalis". IUCN Red List of Threatened Species 2016: e.T22734433A95085425. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734433A95085425.en. https://www.iucnredlist.org/species/22734433/95085425. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 Collar, N. J. (2006). "A taxonomic reappraisal of the Black-browed Barbet Megalaima oorti". Forktail (Oriental Bird Club) 22: 170–173. http://orientalbirdclub.org/wp-content/uploads/2012/09/Collar-BlackBrowedBarbet.pdf. 
  3. 3.0 3.1 "Black-browed Barbet". Birding in Taiwan. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  4. 4.0 4.1 4.2 "Psilopogon nuchalis (Gould, 1863)". Taiwan Encyclopedia of Life (in Chinese). பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "五色鳥保育" (in Chinese). பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psilopogon nuchalis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைவான்_குக்குறுவான்&oldid=3757683" இலிருந்து மீள்விக்கப்பட்டது