தைரியம் (திரைப்படம்)
தைரியம் | |
---|---|
இயக்கம் | பி. குமரேசன் |
இசை | ஆர். டி. மோகன் சிங் எம். என். சுரேந்தர் |
நடிப்பு | பி. குமரேசன் தீபு கார்த்திகா அடைக்கலம் ராதாரவி ரியாஸ் கான் |
ஒளிப்பதிவு | நவநீதகிருஷ்ணன் |
கலையகம் | ஆர்பி கிரியேசன்ஸ் |
வெளியீடு | சனவரி 29, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தைரியம் ( Thairiyam) என்பது 2010 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். ஆர்.பி. கிரியேஷன்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்தை பி.குமரன் இயக்கியுள்ளார். தீபூ கார்த்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படம் 29 ஜனவரி 2010 அன்று வெளியிடப்பட்டது[1]
குமரன் தனது காதலியான தீபுவை ரியாசிடமிருந்து ஏற்படும் ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். குமரனுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பின், ரியாஸ் நினைவிழந்து விடுகிறார், ஆனால், ரியாஸின் அனைத்து நண்பர்களும் ஒரு சூழ்ச்சியினால் கொல்லப்படுகிறார்கள் என்ற உண்மை தெரியவருகிறது. பல திருப்பங்களுக்கு பிறகு தீய எண்ணம் கொண்ட வில்லன் காமராஜின் கதை எவ்வாறு முடிகிறது.
நடிகர்கள்
[தொகு]- பி.குமரன்- குமரனாக
- தீபு - ரம்யாவாக
- ஜெனிப்பராக கார்திகா அடைக்கலம்
- தீபா வெங்கட் ராதாரவி அஜய் ரத்தினம்
- ரியாஸ் கான் பாண்டியராஜன்
- பொன்னம்பலம்
- பிரகதி[2]
தயாரிப்பு
[தொகு]இப்படத்தின் இயக்குனர் எம்.எஸ். சரோஜ்குமார் என்பவர் இயக்கிய இப்படம் வெளியீட்டின் போது பி.குமரன் இயக்கியதாக 2009இல் வெளிவந்தது. இறுதிக்காட்சியில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சியில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களைக் கொண்டு 15 நாட்களுக்கு படமாக்கப்பட்டது..[3]
வெளியீடு
[தொகு]இப்படம் பொதுவாக தமிழ்நாடு முழுவதும் ஒரு குறைந்த சராசரியான வசூலையே பெற்றது. சென்னையில் ஆரம்ப வார இறுதியில் ரூபாய் 3,46,944 மட்டுமே வசூல் செய்தது.[4]
விமர்சனம்
[தொகு]முதல் முயற்சியென்பதால் சரியென தி இந்து நாழிதல் எழுதியது.[5] குமரன் சோதனையை கடந்து சென்றாலும், அவர் தனது அலங்காரம் குறித்து கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறியது. ரம்யாவாக நடிகை தீபூ "சராசரியாக" இருப்பதோடு கதாநாயகியைவிட அதிக காட்சிகளைப் பெறுகிறார். ஜெனிஃபர் எனும் கார்த்திகா பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். ஆனால் படத்தில் சரியாக நடிக்கவில்லை. தயாரிப்பு சம்பந்தமாக, இப்படத்தில் குமரன் கதை, திரைக்கதை, உரையாடல், நடிப்பு, இயக்குதல் மற்றும் தயாரித்தல் போன்ற பல பணிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் எழுதியது[5]
ஒலிதொகுப்பு
[தொகு]Thairiyam | |
---|---|
Soundtrack
| |
வெளியீடு | 17 December 2009 |
ஒலிப்பதிவு | 2009 |
இசைப் பாணி | Film soundtrack |
அறிமுக இசையமைப்பளர் ஆர். டி. மோகன் சிங் இசையமைத்துள்ளார். புகழ் பெற்ற பாடகர்களான ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு மற்ரும் தேவா ஆகியோரும் பாடியுள்ளானர்.
Track list | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "இளமையில் மோகம்" | ஹரிஷ் ராகவேந்திரா, அனுராதா ஸ்ரீராம் | ||||||||
2. | "காதல் என்ன காதல்" | தேவா (இசையமைப்பாளர்) | ||||||||
3. | "மதுர மல்லியே" | திப்பு, மாலதி | ||||||||
4. | "புது வருஷம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "An Interesting Friday To Watch Out For…. | Articles - Features". Top 10 Cinema. 2010-01-25. Archived from the original on 2012-03-12. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ "Archived copy". Archived from the original on 21 பெப்பிரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்பிரவரி 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "'Thairiyam', a movie with guts - Tamil Movie News". IndiaGlitz. 2009-10-05. Archived from the original on 2009-10-08. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ "Dhairiyam - Behindwoods.com - Tamil Top Ten Movies - Thamizh Padam Jaggubhai Goa Naanayam Kutty Porkkalam Aayirathil Oruvan Vettaikaran". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ 5.0 5.1 "Cinema Plus / Film Review : The big fight". The Hindu. 2010-02-05. Archived from the original on 2010-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.