உள்ளடக்கத்துக்குச் செல்

தேவ்.டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dev.D
Dev.D promotional poster
இயக்கம்Anurag Kashyap
தயாரிப்புUTV Spotboy, Bindaas
கதைAnurag Kashyap, Vikram Motwane
இசைAmit Trivedi
நடிப்புAbhay Deol
Kalki Koechlin
Mahi Gill
Dibyendu Bhattacharya
ஒளிப்பதிவுRajeev Ravi
படத்தொகுப்புAarti Bajaj
விநியோகம்UTV Motion Pictures
UTV Spot Boy
வெளியீடுபெப்ரவரி 6, 2009 (2009-02-06)
ஓட்டம்138 min
நாடு இந்தியா
மொழிHindi
மொத்த வருவாய்$4,247,969

தேவ்.டி என்பது 2009 ஆம் ஆண்டின் இந்திய ரொமான்டிக் டிராமா திரைப்படமாகும், இது பிப்ரவரி 6, 2009 அன்று வெளியானது.[1] அனுராக் காஷ்யப் எழுதி இயக்கிய இந்த படம், சரத் சந்திர சதோபாத்யாய் எழுதிய பெங்காலி இலக்கிய புதினமான தேவதாஸின் நவீன கால வடிவமாகும்.[2][3] முன்னதாக இந்த புதினத்தை பி.சி.பரூவா மற்றும் பிமல் ராய் மற்றும் சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி ஆகிய மதிப்புமிக்க திரைப்பட இயக்குநர்கள் திரைக்கான மாற்றத்துடன் உருவாக்கியிருக்கின்றனர். தேவ்.டி ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவராலும் ஒரேவகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது, அத்துடன் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்திற்காக இந்தியின் திருப்புமுனை படங்களில் ஒன்றாக இது புகழப்படுகிறது.

கதைச் சுருக்கம்

[தொகு]

தேவ் (அபய் தியோல்) ஒரு பணக்கார பஞ்சாபி தொழிலதிபரின் மகன். அவனும் பரோவும் (மஹி கில்) குழந்தை பருவ நண்பர்கள். ஆனால், பதட்டமாக முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் குணமுடையவனாக இருக்கும் தேவ், பரோவின் பாசத்தையும் அன்பையும் புரிந்து கொள்ளாமல், அற்பமான விஷயங்களுக்கு எல்லாம் பரோவை காயப்படுத்துகிறான்.

சமகால பஞ்சாப் மற்றும் டெல்லியை மையமாகக் கொண்டு, குடும்ப உறவுகள் ஆணாதிக்க மரபுகளால் ஆதிக்கம் செய்யப்படுவதாக இருக்கிற, திருமணங்கள் அதிகாரம் மற்றும் "அந்தஸ்து"க்கான விளையாட்டாக குறைந்து போயிருக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு படம் அமைக்கப்பட்டிருக்கிறது.

தனது மகன் எவ்வளவு கெட்டுப் போய் விட்டான் என்று வருந்தி தந்தை தேவை மேல் படிப்பிற்காக லண்டன் அனுப்புகிறார். ஆனால் இடத்தால் பிரிக்கப்படும் போது, பரோ மற்றும் தேவ் இடையிலான இளம் காதல் வளரவே செய்கிறது. பரோவை சந்திக்க சண்டிகார் வந்து சேருகிறான் தேவ். காதலிக்க அவர்கள் செய்யும் முயற்சிகள் சில இருண்ட விசித்திரமான தருணங்களை சந்திக்கின்றன. இந்த ஜோடியின் வாழ்நாள் முழுவதும் அழிக்க முடியாத சந்தேகத்தின் விதைகள் இங்கு தான் விழுகின்றன. பரோ குறித்த வதந்திகளை தேவ் கேட்கும்போது, அதனை அப்படியே நம்பி பரோவை அவமதித்து ஒதுக்குகிறான். பரஸ்பர சந்தேகமும், ஒரு பெண் பாலியல்ரீதியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அடிப்படையாக ஒரு ஆணாதிக்க சிந்தனைப் பார்வையும் அவர்கள் இருவரையும் பிரிக்கிறது. தேவ் தன்னை அவமதித்தது குறித்து அறியும் பரோ தானும் தேவை ஒதுக்குவதோடு, தனது பெற்றோர் தேர்வு செய்யும் எந்த மணமகனையும் திருமணம் செய்யவும் சம்மதிக்கிறாள். பரோவின் திருமண நாளன்று, இந்த வதந்திகள் எல்லாம் பொய் என்பதை தேவ் உணர்கிறான். ஆனால் அவனது தன்முனைப்பு தனது தவறை ஒத்துக் கொள்ள விடாமல் செய்து விடுகிறது, அவள் இன்னொருவனை திருமணம் செய்வதை அவன் தடுக்கவில்லை.

இங்கு தான் சாந்தா நுழைகிறார். இந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்திய டெல்லி பள்ளியின் செக்ஸ் எம்எம்எஸ் சம்பவம் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவத்தில் மகளின் மானம் பறிபோய் விட்டதாக மனம் வெதும்பி அவளது தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். அவளது குடும்பம் அவளை ஒதுக்கிவிடுகிறது. எவ்வாறு ஒரு மனவேதனையுற்ற அப்பாவி பள்ளிப் பெண் தன்னை ஒரு விபச்சாரியாக மாற்றிக் கொள்கிறாள் என்பதை படம் சித்தரிக்கிறது. சாந்தா தொழில்முறை விபச்சாரி அல்ல என்றாலும், அதிலிருந்து அதிகம் வித்தியாசமும் இல்லை. முஜ்ராக்களுக்கு பதிலாக, பிரபல அமெரிக்க பாலியல் திரைத்தொடர்களில் இருந்து காட்சிகளை அவள் செய்து காட்டுகிறாள். அவளை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒரே விஷயம், அவள் தொழிலுக்காக தனது படிப்பை விடவில்லை என்பதோடு அந்த தொழிலை எப்போதும் விட்டு விடுவதற்கான வாய்ப்பையும் திறந்தே வைத்திருந்தாள்.

பரோவின் திருமணம் மனதை துன்புறுத்த, தேவ் மது மற்றும் போதை மருந்துகளின் துணையை நாடுகிறான். தனது தொலைந்து போன காதலை தேடுவதற்கும், தனது தந்தையிடம் இருந்து அகன்று செல்வதற்குமாய் சண்டிகாரில் இருந்து டெல்லி சென்று விடுகிறான். பல மாதங்களுக்குப் பின், நள்ளிரவில் பரோவின் கணவனுடன் தொலைபேசியில் பேசுகிறான் தேவ், இதற்குப் பின் பரோ அவனை வந்து பார்க்கிறாள். தலைவிதியை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பரோ பக்குவப்பட்டிருந்தாலும், அவளது இதயம் இன்னும் தனது குழந்தைப் பருவ காதலனுக்காகத் துடித்துக் கொண்டிருந்தது. அவளது காதல் எப்போதும் தீவிரமான அன்பாக உருமாறுகிறது. இன்னொரு பக்கத்தில், தேவுக்கு காதலை விடவும் மிக அதிகமானதொன்று தேவைப்படுகிறது - அவளது உடம்பிற்கான பிரத்யேக உரிமை - அங்கு தான் அவனுக்கு அதிர்ஷ்டமின்றி போய் விடுகிறது. பரோவைப் பிரிந்திருப்பதைக் காட்டிலும், பரோ இன்னொருவனுடன் உறவு கொள்வது குறித்த நினைப்பு தான் அவனது துன்புறுத்தும் வேதனைக்குக் காரணமாய் அமைகிறது.

துன்பியலாக, அவனது வாழ்க்கை எப்போது பெண்களைச் சுற்றித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணால் தன்னைத் தானே அழித்துக் கொள்ள தள்ளப்படுகிறான், மற்றொரு பெண்ணால் மீட்கப்படுகிறான். இறுதியில் தான் செய்த தவறை அவன் உணர்கிறான், உண்மையில் பரோவை அவன் எப்போதும் காதலித்திருந்திருக்கவில்லை. மீண்டும் சாந்தாவிடமே செல்லும் அவன் அதன் பின் அவளுடன் வாழ்கிறான்.

நடிப்பு

[தொகு]
  • ஜூனியர் தேவேந்திர சிங்காக (தேவ்) ஏகான்ஸ் வாட்ஸ்
  • தேவேந்திர சிங் தில்லானாக (தேவ்) அபய் தியோல்
  • லெய்ன்/சாந்தாவாக (சந்திரமுகி)கல்கி கோய்ச்லின்
  • பர்மிந்தராக (பரோ) மஹி கில்
  • சுனிலாலாக திப்யேந்து பட்டாச்சார்யா
  • புவனாக (பரோவின் கணவன்) ஆஷிம் ஷர்மா
  • ரசிகாவாக பராக் மதன்

தயாரிப்பு

[தொகு]

படத்தின் ஆரம்ப யோசனையை அபய் தியோல் அனுராக் காஷ்யப்பிடம் தெரிவித்தார், பின் அனுராக் விக்ரமாதித்யா மோத்வானியுடன் இணைந்து படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டார், படத்திற்கு இளமை தோற்றத்தை கொடுப்பதற்காக "இன்றைய தலைமுறை குறித்த செய்தித் தலைப்புகளை" அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ரோனி ஸ்க்ரூவாலாவால் தயாரிக்கப்பட்ட இந்த படம், மத்திய டெல்லி[4] யில் இருக்கும் பஹார்கஞ்ச் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது.

உருவாக்கம்

[தொகு]

தேவதாஸ் என்ற தலைப்பில் வந்த முந்தைய 9 படங்களின் எந்த ஒரு தழுவலையும் செய்ய அனுராக் காஷ்யப் விரும்பவில்லை.[2][5] அவரது பார்வை 1917 ஆம் ஆண்டில் சரத் சந்திர சதோபாத்யாய் எழுதிய மூல இலக்கிய புதினத்தின் ஒரு நவீன பார்வையாக உருவாகியது.[2] தனது தேவதாஸ் மூல புதினத்தை பிரதிபலிக்க வேண்டும், ஆனால் அவர் 2008 ஆம் வருடத்தில் வாழும் ஒரு நபரைப் பிரதிபலிக்க வேண்டும், எனவே தேவதாஸ் தன்முனைப்புள்ள, உள்ளத்தை மறைத்து நாடகமாடுகிற, உணர்ச்சிவயம் மிக்கவராக, தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் தன்னை அழித்துக் கொள்பவராக இருக்க வேண்டும் என்று காஷ்யப் முடிவெடுத்தார்.[2][6] படத்தின் கதை குறித்தும், அதில் தேவாக நடிக்கும் தனது பாத்திரம் குறித்தும் அபய் தேவ் ரேடியோ சர்கத்திடம் கூறும் போது தெரிவித்தார்: "கதை வெகுவாக நான் ஆங்கிலத்தில் படித்த கதையை ஒட்டி இருக்கிறது. இந்த புத்தகத்தை நான் புரிந்து கொண்ட வகையில் இதில் எனது பாத்திரத்தை நடித்துள்ளேன். நாயகன் சமகாலத்து மனிதன், அவன் பல வழிகளிலும் நகர்ப்புற மனிதனாக இருப்பான், அவனைச் சுற்றியிருக்கும் உலகம் அவனை தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது, அவன் ஒரு சீரழிந்த, பிடிவாதமிக்க, பழக்கத்திற்கு அடிமையான ஒரு ஆளுமையைக் கொண்டவனாக இருக்கிறான்".[7]

ஆரம்ப தாமதங்கள்

[தொகு]

காஷ்யப்பின் நோ ஸ்மோக்கிங் படம் வர்த்தகரீதியாக படுதோல்வியுற்றதைத் தொடர்ந்து, யுனைடெட் டெலிவிஷன் (யுடிவி) நிறுவனம் இயக்குநரின் அடுத்த படமான அபய் தியோல் நடிக்கும் தேவ்.டி படத் தயாரிப்பில் இருந்து பின்வாங்கி விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், யுடிவி அபயை மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது என்றும், படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்ததால் அபய் நவம்பர் 2007 முதல் மார்ச் 2008 வரையான காலத்தை காஷ்யப்பின் படத்திற்கென ஒதுக்கியிருந்தார் எனவும் தகவல்கள் தெரிவித்தன. படம் ஆரம்ப சிக்கல்களை சந்தித்து நிறுத்தப்பட்ட போது, யுடிவி பின்வாங்கி விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.[8] அந்த சமயத்தில், யுடிவி பின்வாங்கி விட்டதாக கூறப்படுவதை இயக்குநர் மறுத்தார். தனது முந்தைய படமான ஹனுமன் ரிட்டர்ன்ஸ் பணிகள் முடிவடைந்தவுடன் தான் தன்னால் இந்த படத்தில் வேலை செய்ய முடியும் என்பதால் தான் தாமதம் நேர்வதாக அவர் விளக்கினார். தான் இப்போதும் தனது சந்திரமுகியைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், இப்போது அபய் மற்றும் புதுமுகம் மஹி கில் மட்டுமே முடிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.[9] சந்திரமுகி பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகையைக் கண்டறிவதற்கு கூடுதல் நேரம் எடுத்ததால் அந்த படம் மேலும் தாமதமுற்றது, இறுதியில் தேர்வு ஒத்திகைக்கு இறுதியில் வந்த பெண்களில் ஒருவரான கல்கி கோச்லின் தேர்வானார்[4].

வெளியீடு

[தொகு]

வர்த்தகரீதியான வசூல்

[தொகு]

தேவ் டி முதல்நாளில் சராசரியான வசூலாக சுமார் 15 மில்லியன் ரூபாய்களை ஈட்டியது. ஆயினும் விரைவில் திரையரங்குகளில் வரவேற்பு அதிகரிக்க, தனது பட்ஜெட்டான 60 மில்லியன் ரூபாயை ஒரு சில வாரங்களில் மீட்டு விட்டது.[10] முதல் நான்கு வாரங்களின் மொத்த வசூல் சுமார் 150 மில்லியன் ரூபாய்.[11]

வரவேற்பு

[தொகு]

தேவ்.டி பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது. டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சகரான நிகாத் கஸ்மி இந்த படத்தை "பாலிவுட்டின் திருப்புமுனை படம்" என்று வர்ணித்து படத்திற்கு 5/5 தரமதிப்பீட்டை வழங்கினார்.[12]. இந்தியன் எக்ஸ்பிரஸின் சுப்ரா குப்தா அபய் தியோலின் நடிப்பு மற்றும் ஒட்டுமொத்த படத்தை பாராட்டினார்.[13] படத்தின் "நளினமான பாணி மற்றும் இந்தி சினிமாவின் எல்லைகளை விரிவாக்கும் துணிச்சலான பொருள்விளக்கம்" ஆகியவற்றை பாராட்டிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதற்கு 3.5/5 தரமதிப்பீட்டை வழங்கியது.[14] ஏஓஎல் இந்தியாவின் நோயான் ஜோதி பராசரா இந்த படத்தில் முழுமையாக மனதைப் பறிகொடுத்தார், அவர் கூறினார் : "போய் படத்தை பாருங்கள், ஒரு இயக்குநராக அனுராக் காஷ்யப் எவ்வளவு திறமைசாலி என்பதன் ஒரு மாதிரியைக் கண்டு அசந்து போவீர்கள். குறைந்தபட்சம் படத்தின் முதல் பாதி உங்களை மெய்மறக்கச் செய்யும்."[15]

இசை

[தொகு]
Dev.D
Soundtrack
Amit Trivedi
வெளியீடுDecember 2008
இசைப் பாணிFilm Soundtrack
நீளம்1:01:31
இசைத்தட்டு நிறுவனம்T-Series
Amit Trivedi காலவரிசை
'Aamir
(2008)
Dev.D

தேவ்.டி படத்தில் இசையமைப்பாளர் அமித் திரிவேதியின் 18 இசைத்தடங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சிறப்பு பஞ்சாபி இசைத்தடங்கள், ஒன்று முழுக்க முழுக்க பஞ்சாபி, இன்னொன்றில் ஸ்ட்ரீட் பேண்ட் பாஜா தோய்வு இருக்கும் என்று டி-சிரீஸ் இசைத்தட்டு டிசம்பர் 31 அன்று வெளியான சமயத்தில், அவர் குறிப்பாகத் தெரிவித்தார். ஒரு ராக் பாடல், உலக இசை, ஒரு ஆவாதி பாடல் மற்றும் 1970, 80களின் பாப் தோய்வுடனான ஒரு பாடல் ஆகியவற்றுடன் ஒரு காதல்ரசம் சொட்டும் ராஜஸ்தானி நாட்டுப்புற பாடலும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.[16][17] இசைத்தட்டு மிகப்பெருமளவில் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. விமர்சகர் ஜோகிந்தர் டுதெஜா தெரிவித்தார்: இந்த இசைத்தட்டு வர்த்தகரீதியாக வெற்றி பெறுமா இல்லையா என்பதையெல்லாம் தூக்கிப் போடுங்கள்; இது உதாரணமாய் விளங்கக் கூடிய படைப்பு, அது தான் முக்கியமான விஷயமாகும்"[18] இந்த இசைத்தட்டு இளைஞர்களிடம் மிகப் பெருமளவில் பிரபலமானது. "எமோசனல் ஆட்யாசார்" என்னும் பாடல் பொதுமக்களிடையே மிகப் பிரபலமானதோடு, பாடலின் பேர் தான் அநேக இந்திய இளைஞர்களின் தற்போதைய உச்சரிப்பு மந்திரமாக ஆகியிருக்கிறது.[19]

# பாடல் நீளம்
1. "Emosanal Attyachar (Brass Band Version)" (performed by BandMaster Rangeela and Rasila) 4:00
2. "Duniya" (performed by Amit Trivedi) 3:52
3. "Nayan Tarse" (performed by Amit Trivedi) 3:09
4. "Pardesi" (performed by Tochi Rainaa) 4:00
5. "Saali Khushi" (performed by Amit Trivedi) 3:13
6. "Paayaliya" (performed by Shruti Pathak) 5:54
7. "Mahi Mennu" (performed by Labh Janjua) 2:54
8. "Aankh Micholi" (performed by Amit Trivedi) 4:00
9. "Yahi Meri Zindagi" (performed by Aditi Singh Sharma) 3:43
10. "Dhol Yaara Dhol" (performed by Shilpa Rao and Kshitij Tarey) 4:10
11. "Ek Hulchul Si" (performed by Joi) 4:29
12. "Hikknaal" (performed by Labh Janjua) 3:47
13. "Dil Mein Jaagi" (performed by Anusha Mani) 3:01
14. "Emotional Attyachar (Rock Version)" (performed by Bony Chakravorty) 4:01
15. "Ranjhana" (performed by Shilpa Rao and Kshitij Tarey) 1:47
16. "Mahi Mennu (Sad Version)" (performed by Labh Janjua) 1:21
17. "Dev-Chanda Theme 1" (instrumental) 2:23
18. "Dev-Chanda Theme 2" (instrumental) 1:47

குறிப்புதவிகள்

[தொகு]
  1. Passionforcinema.com பரணிடப்பட்டது 2012-02-14 at the வந்தவழி இயந்திரம், டிசம்பர் 30 2008, அனுராக் காஷ்யப் கருத்து
  2. 2.0 2.1 2.2 2.3 Passionforcinema.com பரணிடப்பட்டது 2008-09-05 at the வந்தவழி இயந்திரம், ஜூலை 9 2007, அனுராக் காஷ்யப் பேட்டி
  3. Hollywood.com, "Movies from SpotBoy Motion Pictures"
  4. 4.0 4.1 'Dev D' is not like Sudhir Mishra's 'Aur Devdas' பரணிடப்பட்டது 2012-11-04 at the வந்தவழி இயந்திரம் தி ஹிந்து, புதன், டிசம்பர் 10, 2008.
  5. IMDB முன்னதாக தயாரிக்கப்பட்ட பதிப்புகளின் பட்டியல்]
  6. Masala.com, "முடிந்த அளவு நவீனமயப்பட்டதாக தேவதாஸை உருவாக்குவதில் அனுராக் காஷ்யப் ஆர்வமாய் இருக்கிறார்"
  7. RadioSargam.com, "தேவ் டி குறித்து அபய் தியோல் ரேடியோ சர்கமிடம் பேசுகிறார்"
  8. In.movies.yahoo பரணிடப்பட்டது 2008-08-21 at the வந்தவழி இயந்திரம், நவம்பர் 17 2007, "UTV Backs Out Of Dev D?"
  9. Buzz18.com பரணிடப்பட்டது 2008-06-10 at the வந்தவழி இயந்திரம், பிப்ரவரி 1 2008, "It's official: Ambika-Anurag split- Anurag's film will be now produced by Spotboy, a sister concern of UTV"
  10. "Dev D hits Box Office gold". NDTV Movies. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Bollywood box-office report of the week". Bollywood Trade News Network. Archived from the original on 2010-07-28. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.
  12. சினிமா விமர்சனம்: தேவ் டி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிப். 5, 2009.
  13. சினிமா விமர்சனம்: தேவ் டி
  14. "http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=NLetter&id=6e08f7d4-7695-4ff5-b600-606c563eb936&MatchID1=4922&TeamID1=4&TeamID2=2&MatchType1=1&SeriesID1=1244&PrimaryID=4922&Headline=Review:+EMDev+D/EM". Archived from the original on 2009-02-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10. {{cite web}}: External link in |title= (help)
  15. http://www.aol.in/bollywood/story/dev-d-review/2009020607129019000001
  16. Radioandmusic.com, செப்டம்பர் 5 2008, "Amit Trivedi to compose for UTV Spot Boy's next two films"
  17. Rediff.com, ஜூலை 21 2008, "Making music, from Aamir to Dev D"
  18. BollywoodHungama.com, ஜனவரி 7 2009, "BollywoodHungama Music Review for Dev D"
  19. RadioSargam.com, ஜனவரி 24 2009, "Radio Sargam Music Review for Dev D"

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்.டி&oldid=3953695" இலிருந்து மீள்விக்கப்பட்டது