தேவி கலை அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி கலை அறக்கட்டளை
அமைவிடம்தில்லி, இந்தியா
வகைஓவியக் காட்சியகம்
நிறுவியவர்அனுபம் போதார் மற்றும் லேகா போதார்
கட்டிடக்கலை நிபுணர்அனிகேத் பகவத்து
வலைத்தளம்deviartfoundation.org

தேவி கலை அறக்கட்டளை (Devi Art Foundation) இந்தியாவின் தில்லியில் உள்ள குர்கானில் அமைந்துள்ள ஒரு சமகால கலை அருங்காட்சியகம் ஆகும்.

தேவி கலை அறக்கட்டளை அருங்காட்சியகம் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது, [1] இது இந்தியாவின் முதல் சமகால கலை அருங்காட்சியகமாகும். [2] அனுபம் போதார் மற்றும் அவரது தாயார் லேகா போதார் ஆகியோரால் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது, இவர்களுடைய குடும்ப வணிகங்களில் சிர்பூர் காகித ஆலைகள் மற்றும் இராசத்தானில் உள்ள தேவிகர் சொகுசு உணவு விடுதி ஆகியவை அடங்கும். [3] [4]

தேவி கலை அறக்கட்டளை அருங்காட்சியகம் அதன் நிறுவனர்களின் தொகுப்புகளிலிருந்து இந்திய கலையின் நிரந்தர மற்றும் தற்காலிக கண்காட்சிகளை வழங்குகிறது, [5] "இந்தியாவின் மிக முக்கியமான தனியார் சேகரிப்புகளில் ஒன்று" என்று ஆர்ட் ஆசியா பசுபிக் என்ற செய்தி இதழ் இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி விவரித்துள்ளது, இங்கு " துணைக் கண்டம் முழுவதிலும் இருந்து 7,000 க்கும் மேற்பட்ட சமகால, நவீன மற்றும் பழங்குடி கலைப்படைப்புகள் உள்ளன. " [1] தீக்சா நாத்து இதன் முதல் கண்காட்சியை ஏற்பாடு செய்தார், காட்சி நகரும் படம் இருபத்தைந்து இந்திய கலைஞர்களின் காணொளி மற்றும் புகைப்படத்தில் கவனம் செலுத்தியது.

அருங்காட்சியகத்தின் கட்டிடத்தை கட்டிடக் கலைஞர் அனிகேத் பகவத் வடிவமைத்துள்ளது, கார்டன் எஃகு வகையுடன் கையால் செய்யப்பட்ட செங்கற்கள் கலக்கப்பட்டு இவ்வடிவமைப்பு ஆக்கப்பட்டுள்ளது. இதன் மேல் தளங்களில் சிர்பூர் காகித ஆலையின் தலைமையகமும் உள்ளது. [6] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Devi Art Foundation Opens in New Delhi". ArtAsiaPacific. India. September–October 2008. பார்க்கப்பட்ட நாள் 11 April 2021.
  2. Sengupta, Somini (25 August 2008). "Where Tradition Has Ruled, a Home for Contemporary Art". The New York Times (New Delhi). https://www.nytimes.com/2008/08/26/arts/design/26collect.html. 
  3. "Lady of the manor". The Telegraph. 10 April 2011. https://www.telegraphindia.com/7-days/lady-of-the-manor/cid/400210. 
  4. 4.0 4.1 Nicholson, Louise (October 2009). "A family quest". Apollo. Vol. 170, no. 569. பார்க்கப்பட்ட நாள் 11 April 2021.
  5. Harris, Lucian (1 March 2008). "Devi Art Foundation is India's first private museum of contemporary art". The Art Newspaper. No. 189. Delhi. பார்க்கப்பட்ட நாள் 11 April 2021.
  6. Gregory, Rob (23 August 2010). "Devi Art Foundation by M/S Prabhaker B Bhagwat, Gurgaon, Delhi, India" (in en). Architectural Review. https://www.architectural-review.com/today/devi-art-foundation-by-m-s-prabhaker-b-bhagwat-gurgaon-delhi-india. பார்த்த நாள்: 25 April 2021. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_கலை_அறக்கட்டளை&oldid=3745199" இலிருந்து மீள்விக்கப்பட்டது