தேவதச்சன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேவதச்சன் (பிறப்பு: நவம்பர் 6, 1952) தமிழகக் கவிஞர் ஆவார். இவர் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது உட்படப் பல இலக்கிய விருதகளைப் பெற்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவரது இயற்பெயர் ஏ. எஸ். ஆறுமுகம் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம். எஸ். ஏ. சேதுராமலிங்கம், சாரதா ஆகியோருக்குப் பிறந்தவர். கோவில்பட்டியில் பள்ளிப்படிப்பும் இளங்கலை பட்டப்படிப்பும் முடித்த பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை (தத்துவம்) பட்டம் பெற்றார்.
இலக்கியப் படைப்புகள்
[தொகு]70களில் கவிதை எழுதத் தொடங்கியவர். ‘கசடதபற’ என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ழ’ என்ற கவிதை இதழிலும் அதிகமாக எழுதி வந்தவர். காலச்சுவடு, கல்குதிரை, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்கள் இவரது கவிதைகளை வெளியிட்டுள்ளன.
1982 இல் அவரவர் கைமணல் என்ற தன் முதல் தொகுதியை வெளியிட்டார். அதற்கு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் காலச்சுவடு பத்திரிகையில் இவரது தனித்துவமான பல கவிதைகள் வெளிவந்தன. நவீன தமிழ்க்கவிதைக்கு புதியதோர் அழகியலை அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்த தலைமுறை இளங்கவிஞர்களின் கிரியாஊக்கியாக மதிப்பிடப்படுகிறார்.
கவிதை தொகுதிகள்
[தொகு]- அவரவர் கை மணல் (1982)
- அத்துவான வேளை (2000)
- கடைசி டினோசார் (2004)
- யாருமற்ற நிழல் (2006)
- ஹோம்ஸ் என்ற காற்று (2010)
- இரண்டு சூரியன் (2012)
- எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது (2013)
- மர்மநபர் (முழு தொகுப்பு) (2017)
பெற்ற விருதுகள்
[தொகு]- அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பு வழங்கிய விளக்கு விருது (2010)
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது (2011)
- கோவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு வழங்கிய விஷ்ணுபுரம் விருது (2015)
- கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை வழங்கிய கவிக்கோ விருது (2017)
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய சிற்பி இலக்கிய விருது (2018)