உயிர்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்மை 2003 ஆகத்து மாதத்திலிருந்து மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு இலக்கிய மாத இதழாக வெளிவருகிறது. அரசியல், சமூகவியல், அறிவியல், சூழலியல், சினிமா, பழந்தமிழ் இலக்கியம், சிறுகதை, கவிதை, நூல் விமர்சனம் என்பனவற்றிற்கு முக்கியத்துவமளித்து வருகின்றது. நாடகம் தொடர்பிலும் உயிர்மை கவனம் செலுத்துகின்றது. நல்ல, வித்தியாசமான நிழற்படங்களுக்கும், உருக்களுக்கும் இவ்விதழ் இடமளிக்கிறது. உயிர்மை பதிப்பகம் மூலம் பெருமளவு தரமான நூல்கள் வெளியிடப்படுகின்றன.

இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்மை&oldid=1655372" இருந்து மீள்விக்கப்பட்டது