விஷ்ணுபுரம் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஷ்ணுபுரம் விருது
திகதி2010
Locationகோவை
நாடுஇந்தியா
வழங்கியவர்விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
விருது(கள்)ரூ 50,000 பணமுடிப்பு & கேடயம் ( 2013 முதல் ரூ. ஒரு லட்சம் )
முதலில் வழங்கப்பட்டது2010
இணையதளம்http://www.jeyamohan.in Edit this on Wikidata

விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் தமிழ் இலக்கிய செயல்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் இலக்கிய விருது. 2010 முதல் அளிக்கப்படுகின்றது. பொதுவாக அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதே இவ்விருதின் நோக்கம். விருது ரூபாய் ஐம்பதாயிரமும் நினைவுப்பரிசு கேடயமும் அடங்கியது. 2013 முதல் விருதுத்தொகை ஒருலட்சமாக உயர்த்தப்பட்டது. விஷ்ணுபுரம் அமைப்பின் சிற்பமும் பரிசாக அளிக்கப்படுகிறது.

பரிசுபெறும் படைப்பாளியைப் பற்றி ஒரு நூல் பரிசுவிழாவில் வெளியிடப்படுகிறது. பரிசுபெறுபவர் குறித்த ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்படும். பரிசுபெறும்படைப்பாளியைப்பற்றிய விரிவான இருநாள் கருத்தரங்கும் விவாதங்களும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் அமைப்பாளர் கே.வி.அரங்கசாமி. விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2016 முதல் ஒரு அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்கள்[தொகு]

விழாக்கள்[தொகு]

விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாக்கள் இலக்கியவாசகர்கள் கூடும் கொண்டாட்டங்களாக நிகழ்த்தப்படுகின்றன விழாவிற்கு முதல்நாளே வாசகர்கள் கூடுவார்கள். வாசகர்களும் எழுத்தாளர்களும் வருவார்கள். மூத்த எழுத்தாளர்களுடன் சந்திப்பும் உரையாடலும் தொடர்ச்சியாக நிகழும்

நூல்கள்[தொகு]

 • கடைத்தெருவின் கலைஞன் - ஆ.மாதவனின் புனைவுலகு
 • பூக்கும் கருவேலம் - பூமணியின் புனைவுலகு
 • ஒளியாலானது - தேவதேவன் படைப்புலகம்
 • அத்துவானவெளியின் கவிதை- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி
 • தாமிராபரணம் - வண்ணதாசனின் புனைவுலகு
 • ராஜ்கௌதமன் - பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல் நடுவே ஞானக்கூத்தன் விருதுபெற்றபோது ஆவணப்படம் எடுத்தமையால் விமர்சனநூல் வெளியிடப்படவில்லை. பின்னர் விமர்சனநூலும் ஆவணப்படமும் இருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி  ஆகியோர் அயல்நிலத்துப் படைப்பாளிகள் என்பதனால் அவர்களின் புனைவுநூல் ஒன்று இங்கே விமர்சனநூலுக்கு பதிலாக வெளியிடப்பட்டது.[12]

ஆவணப்படங்கள்[தொகு]

புகைப்படத்தொகுப்புகள்[தொகு]

 • வருடம் 2010 - விருது பெற்றவர்: ஆ. மாதவன் - படங்கள்
 • வருடம் 2011 - விருது பெற்றவர்: பூமணி - படங்கள்
 • வருடம் 2012 - விருது பெற்றவர்: தேவதேவன் - படங்கள்
 • வருடம் 2013 - விருது பெற்றவர்: தெளிவத்தை ஜோசப் - படங்கள்
 • வருடம் 2014 - விருது பெற்றவர்: ஞானக்கூத்தன் -
 • வருடம் 2015 - விருது பெற்றவர்: தேவதச்சன் - படங்கள்
 • வருடம் 2016 - விருது பெற்றவர்: வண்ணதாசன் - படங்கள்
 • வருடம்2017 - விருதுபெற்றவர் சீ.முத்துசாமி - காணொளிகள்
 • வருடம் 2018 - விருதுபெற்றவர் ராஜ்கௌதமன் - காணொளிகள்
 • வருடம் 2019 - விருதுபெற்றவர் அபி

மேற்கோள்கள்[தொகு]

 1. "A. Madhavan selected for Vishnupuram Literary Award". The Hindu. http://www.thehindu.com/arts/books/article950673.ece. பார்த்த நாள்: 29 December 2012. 
 2. "ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது". பார்த்த நாள் 19 December 2016.
 3. "பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது". பார்த்த நாள் 19 December 2016.
 4. "மனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள்". பார்த்த நாள் 28 December 2012.
 5. "In the stillness of poetry". The Hindu. http://www.thehindu.com/life-and-style/metroplus/in-the-stillness-of-poetry/article4235002.ece. பார்த்த நாள்: 29 December 2012. 
 6. Vishnupuram Award for Srilankan Tamil Writer
 7. "ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014". பார்த்த நாள் 19 December 2016.
 8. "தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015". பார்த்த நாள் 19 December 2016.
 9. "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது". பார்த்த நாள் 23 October 2016.
 10. "விஷ்ணுபுரம் விருது விழா 2010". பார்த்த நாள் 19 December 2016.
 11. "விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2011". பார்த்த நாள் 19 December 2016.
 12. "விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுபுரம்_விருது&oldid=3075970" இருந்து மீள்விக்கப்பட்டது