உள்ளடக்கத்துக்குச் செல்

காலச்சுவடு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காலச்சுவடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காலச்சுவடு 1988இன் நடுப்பகுதியில் சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு காலாண்டிதழாக வெளிவரத் தொடங்கியது. சிறிதுகாலத்தில் நிறுத்தப்பட்டுப் பின்னர் மீண்டும் 1994 இல் கண்ணனையும் மனுஷ்யபுத்திரனையும் ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்தது. இப்போது, எஸ். ஆர். சுந்தரம் எனும் கண்ணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. தொடக்க காலத்தில் காலாண்டிதழாகவும், பின்னர் இருமாத இதழாகவும் வெளிவந்து தற்போது மாத இதழாக வெளிவருகிறது. சிறுகதை, கவிதை, மற்றும் அரசியல், சினிமா, கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் என்பவற்றுக்கு இடமளித்து வருவதுடன், பல்வேறு துறைசார்ந்தோரின் நேர்காணல்களையும் பதிவுசெய்து வருகின்றது. காலச்சுவடு பதிப்பகம் பெருமளவு நூல்களையும் வெளியிட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலச்சுவடு_(இதழ்)&oldid=3978915" இலிருந்து மீள்விக்கப்பட்டது