தேர்-இ கச்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேர்-இ கச்சின் கேரவன்செராய்
Map
மாற்றுப் பெயர்கள்தேர்-இ கச்சின்
பொதுவான தகவல்கள்
நாடுஈரான்

தேர்-இ கச்சின் கேரவன்செராய் (Deir-e Gachin Caravansarai) என்பது ஈரானில் உள்ள ஒரு வரலாற்று கேரவன்செராய் ஆகும். இது காவிர் தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. [1] அதன் வரலாறு மற்றும் தனித்துவமான குணங்கள் காரணமாக, இது சில நேரங்களில் "ஈரான் கேரவன்சராய்களின் தாய்" என்று அழைக்கப்படுகிறது. [2] இது கும் கவுண்டியின் மத்திய மாவட்டத்தில், கும் நகரத்துக்கு வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும் வரமினின் தென்மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் செப்டம்பர் , 2003 அன்று ஈரானின் தேசிய பாரம்பரிய பட்டியலில் பதிவு செய்யப்பட்டது. கேரவன்செராய் முதலில் சாசானிய சகாப்தத்தில் கட்டப்பட்டது.[3] பின்னர் செல்யூக், [4] [5] சபாவித்து [6] மற்றும் குவாஜர்[7] காலங்களில் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புகளுக்கு உட்படுத்தப்ட்டது. அதன் தற்போதைய வடிவம் சபாவித்து சகாப்தத்தைச் சேர்ந்தது. [6] இந்த கேரவன்செராய் இரேயிலிருந்து இசுபகான் வரையிலான பழங்கால பாதையில் அமைந்துள்ளது.

நுழைவு வாயில்
உட்புறம்

சான்றுகள்[தொகு]

  1. "کاروانسرای دیرگچین قم مادر کاروانسراهای ایران - اخبار تسنیم - Tasnim" (in fa). خبرگزاری تسنیم - Tasnim. https://www.tasnimnews.com/fa/news/1396/01/08/1364985/%DA%A9%D8%A7%D8%B1%D9%88%D8%A7%D9%86%D8%B3%D8%B1%D8%A7%DB%8C-%D8%AF%DB%8C%D8%B1%DA%AF%DA%86%DB%8C%D9%86-%D9%82%D9%85-%D9%85%D8%A7%D8%AF%D8%B1-%DA%A9%D8%A7%D8%B1%D9%88%D8%A7%D9%86%D8%B3%D8%B1%D8%A7%D9%87%D8%A7%DB%8C-%D8%A7%DB%8C%D8%B1%D8%A7%D9%86. 
  2. "قم؛ زادگاه مادر کاروانسراهای ایران" (in fa). خبرگزاری مهر | اخبار ایران و جهان | Mehr News Agency. https://www.mehrnews.com/news/2021316/%D9%82%D9%85-%D8%B2%D8%A7%D8%AF%DA%AF%D8%A7%D9%87-%D9%85%D8%A7%D8%AF%D8%B1-%DA%A9%D8%A7%D8%B1%D9%88%D8%A7%D9%86%D8%B3%D8%B1%D8%A7%D9%87%D8%A7%DB%8C-%D8%A7%DB%8C%D8%B1%D8%A7%D9%86. 
  3. Jafarinejad, Abolfazl (2006). "Caravansarais: A Display of Iranian-Islamic Architecture". Naame Anjoman 24. 
  4. Naraghi, Hasan (1973). "The Traces of Achaemenid Civilization in the Works of Safavid Era". Art & People 127. 
  5. Sarafrazi, Abbas (2015). "The Role of Shiite Ministers in the Seljuk Period of Iran and Iraq". History of Islam & Iran 25. 
  6. 6.0 6.1 Rafifar, Jalaleddin; Lorafshar, Ehsan (2003). "Anthropological Study of Safavid Era Caravansaries". Anthropology 4. 
  7. Riyazi, Mohammadreza (1992). "Deir-e Gachin Caravansarai". Asar 21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்-இ_கச்சின்&oldid=3814319" இலிருந்து மீள்விக்கப்பட்டது