தேசிய விளையாட்டு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2008 இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்சு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்ற இருபது-20 மட்டைப்பந்து போட்டி

இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day), இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகத்து 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.[1][2][3]

கத்தார் தேசிய விளையாட்டு நாள்[தொகு]

கத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும்.[4] முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.[5][6]

சப்பான் தேசிய விளையாட்டு நாள்[தொகு]

யப்பான், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்களன்று, "சுகாதாரம் மற்றும் விளையாட்டு நாள்" (体育の日 Tai-iku no Hi?) என இருநாட்களை ஒரே நாளில் கொண்டாடுகிறது. இதன் நோக்கம் ஒரு ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் உறுதி மற்றும் ஒரு செயலில் வாழ்க்கையை விளையாட்டு ஊக்கமளிப்பதாகும். சப்பான் தேசிய விளையாட்டு நாள், 1964இல் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நாளில் குறிக்கப்பட்டு, 1966ஆம் ஆண்டு முதல் விடுமுறையுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆசியாவில் நடைபெற்ற முதலாவது ஒலிம்பிக்கின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10இல் தேசிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது.2000ஆம் ஆண்டில், ஜப்பான் பொது விடுமுறையளித்து 'ஹேப்பி திங்கள்' முறையை செயல்படுத்தியது.[7]

மலேசிய தேசிய விளையாட்டு நாள்[தொகு]

மலேசியா தேசிய விளையாட்டு நாள் (மலாய்: அரி சுகன் நெகரா (Hari Sukan Negara) எனும் இந்நாளை, 2015ஆம் ஆண்டுமுதல், அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தேசிய விளையாட்டு நாள், தன் மக்களிடம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கமாக கொண்ட விடுமுறையாகும் என மலேசியா அறிவித்தது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prime Minister Narendra Modi pays tribute to hockey wizard Dhyan Chand" (29 August 2014). பார்த்த நாள் 29 August 2014.
  2. NDTVSports.com (29 August 2014). "Let's Celebrate Dhyan Chand by Following him, Says Indian Sports Minister". பார்த்த நாள் 29 August 2014.
  3. National Sports Day Celebrations, 28-29 Aug 2014
  4. "National Sport Day in Qatar". பார்த்த நாள் 2014-08-30.
  5. "Gulf Times – Qatar’s top-selling English daily newspaper - First Page". Gulf-times.com. பார்த்த நாள் 2012-02-14.
  6. "Qatar Celebrates National Sports Day". Olympic.qa (2011-12-06). பார்த்த நாள் 2012-02-14.
  7. "Health and Sports Day". www.officeholidays.com (© 2016). பார்த்த நாள் 2016-10-12.
  8. "Hari Sukan Negara 2016 @ KLIA". www.klia.com.my (© 2016). பார்த்த நாள் 2016-10-12.