தேசிய அறிவியல் மையம், தில்லி
நிறுவப்பட்டது | 1992 |
---|---|
அமைவிடம் | பைரன் சாலை, இந்தியா |
ஆள்கூற்று | 28°36′48″N 77°14′43″E / 28.6132428°N 77.2453003°E |
வகை | அறிவியல் அருங்காட்சியகம் |
வருனர்களின் எண்ணிக்கை | 521260 (31 மார்ச் 2010இல்)[1] |
இயக்குனர் | ராமஷர்மா துலிபதி |
மேற்பார்வையாளர் | 5 |
வலைத்தளம் | nscdelhi.org |
தேசிய அறிவியல் மையம் (National Science Centre), இந்தியாவின் டெல்லியில் உள்ள ஓர் அறிவியல் அருங்காட்சியகமாகும் . 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டஇந்த அருங்காட்சியகம் இந்தியாவின் பண்பாட்டுஅமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சிலின் (என்.சி.எஸ்.எம்) ஒரு பகுதியாக இயங்கி வருகிறது. இது புராணா கிலாவிற்கு அருகில் உள்ளது.
வரலாறு
[தொகு]தேசிய அறிவியல் மையம் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்களின் வடக்கு மண்டல தலைமையகமாகும். இந்த கவுன்சிலின் கீழ் இடம் பெறுகின்ற முதல் அறிவியல் அருங்காட்சியகமான பிர்லா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் 2 மே 1959 ஆம் நாளன்று கல்கத்தாவில் தொடங்கியது. அதற்குப் பிறகு மற்றொரு அருங்காட்சியகமான விஸ்வேஸ்வரயா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் பெங்களூரில் 1962 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகங்கள் மேற்கு வங்கத்தின் முதல் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் தொலைநோக்குச் சிந்தனையால் வடிவம் பெற்று, இந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர்லால் நேருவால் ஊக்குவிக்கப்பட்டது. அவர் எப்போதும் அறிவியல் தொடர்பானவற்றிற்கு அதிக ஆர்வம் செலுத்தி வந்தார். அந்த காலகட்டத்தில் கல்கத்தாவில் முதல் அருங்காட்சியகத்தை அமைக்க டாக்டர் பி.சி.ராய் அவர்கள் இளம் வேதியியல் பட்டதாரியான டாக்டர் அமலேண்டு போஸ் என்பவரை நியமித்தார். அதன்பிறகு பல சிறிய மையங்கள் வந்தன. ஆனால் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்தியாவில் அறிவியல் அருங்காட்சியக இயக்கத்தில் ஒரு மந்த நிலை இருந்தது.
ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு அறிவியல் மையம் ஒரு புதிய உத்வேகத்தைக் கண்டது. மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையம் மூன்றாவது பெரிய அறிவியல் மையமாக உருவெடுத்தது. இந்த காலகட்டத்தில், இந்த இயக்கம் பாரம்பரிய அறிவியல் அருங்காட்சியகங்களான இலண்டன் அறிவியல் அருங்காட்சியகம், டச்சஸ் மியூசியம் போன்றவற்றிலிருந்து அமெரிக்காவின் எக்ஸ்ப்ளோரேட்டோரியத்தின் வரிசையில் 'அறிவியல் மையங்கள்' என்று அழைக்கப்பட்ட புதிய பாணியை நோக்கி மாறியது. ராஜீவ் காந்தி மும்பை மையத்தைத் திறந்து வைத்ததன் மூலம், அறிவியல் மைய இயக்கம் வளரும் காலத்தைத் தொடங்கியது, இந்தியாவின் பெரும்பாலான மாநில தலைநகரங்களில் அறிவியல் மையங்கள் திறந்து வைக்கப்பட்டன. கொல்கத்தா, பெங்களூரு மற்றும் மும்பை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், வடக்கில் டெல்லியில் தேசத்தின் தலைநகரில் ஒரு பெரிய மையத்தின் தேவை உணரப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் இதற்கான பணிகள் ஆர்வத்துடன் தொடங்கப்பட்டன. ஆர்.கே.புரத்தில் உள்ள ஒரு நகராட்சி நீச்சல் குளம் அருகே ஒரு சிறிய கொட்டகையுடன் தொடங்கி, அதன் பின்னர் திமர்பூரில் உள்ள ஒரு புதர் அடர்ந்த வனப்பகுதிக்குள், தேசிய அறிவியல் மையம் 1992 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது மற்றும் செயல்படுத்தப்பட்டது. இது 9 ஜனவரி 1992 ஆம் நாளன்று அப்போதைய இந்தியப் பிரதம மந்திரி பி.வி.நரசிம்மராவால் திறந்து வைக்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]தேசிய அறிவியல் மையம் பிராகதி மைதான கண்காட்சி மைதானத்தின் கதவு எண் 1 மற்றும் 2 க்கு இடையில், பைரன் சாலையில் அருகில் அமைந்துள்ளது.
பார்வையாளர் நேரம்
[தொகு]ஹோலி மற்றும் தீபாவளி இந்திய விழா நாட்களைத் தவிர வாரத்தில் ஏழு நாட்களும் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை மையம் திறந்திருக்கும். இந்த கட்டிடத்தை பிரபல இந்திய கட்டிடக் கலைஞர் அச்சியுத் கன்விண்டே வடிவமைத்துள்ளார்.[2]
மேலும் காண்க
[தொகு]- சுவாமி விவேகானந்தர் கோளரங்கம், மங்களூர்
- வான் விஜியன் கேந்திரா (வி.வி.கே) வன அறிவியல் மையங்கள்
குறிப்புகள்
[தொகு]- ↑ Activity report 2009-10. NCSM
- ↑ An Architecture of Independence: The Making of Modern South Asia பரணிடப்பட்டது 3 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம் University of Pennsylvania.