தேக்கப்புள்ளி
பாய்ம இயக்கவியலில் தேக்கப்புள்ளி (Stagnation point) என்பது பாய்வுப் புலத்தில் பாய்வின் திசைவேகம் சுழியமாக இருக்கும் புள்ளியாகும்.[1] பாய்வோடி தொடர்பிலிருக்கும் திடப்பொருட்களின் பரப்பில் தேக்கப்புள்ளி ஏற்படுகிறது, திடப்பொருளால் அப்புள்ளியில் பாய்மம் நகராதபடி செய்யப்படுகிறது. பெர்னூலியின் சமன்பாடுகளின்படி திசைவேகம் சுழியமாக இருக்குமிடத்தில் நிலை அழுத்தம் அதிகபட்சமாக இருக்கும், எனவே தேக்கப்புள்ளிகளில் நிலை அழுத்தம் அதிகமாக இருக்கும். அத்தகைய நிலை அழுத்தம் தேக்க அழுத்தம் என்றழைக்கப்படும்.[2][3]
அமுக்கவியலாப் பாய்வுகளுக்குப் பொருந்தும் பெர்னூலியின் சமன்பாடுகளின்படி, இயக்கநிலை அழுத்தம் மற்றும் நிலை அழுத்தம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே தேக்க அழுத்தம் ஆகும். மேலும், பொதுவாக மொத்த அழுத்தம் எனப்படுவது இயக்கநிலை அழுத்தம் மற்றும் நிலை அழுத்தம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும், ஆகவே அமுக்கவியலாப் பாய்வுகளில் தேக்க அழுத்தம் மொத்த அழுத்தத்துக்குச் சமம்.[3] (அமுக்குமைப் பாய்வில், தேக்கப்புள்ளியை அடையும் பாய்மம் அகவெப்பமாறாச் செயல்முறையில் நகர்ச்சியற்ற நிலைக்குக் கொண்டுவரப்படின் தேக்க அழுத்தம் மொத்த அழுத்தத்துக்கு சமமாகும்.)[4]
குறிப்புதவிகள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Clancy, L.J. (1975), Aerodynamics, Pitman Publishing Limited, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-273-01120-0