சுழிப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

சுழிப்பு அல்லது சுழல் (vortex) என்பது, சுழலுகின்ற பாய்மத்தின், (பெருவாரியான நேரங்களில்) வரிச்சீரற்ற ஓட்டம் ஆகும். மூடப்பட்ட வழிக்கோட்டுடன் சுழலும் எந்தவொரு பாய்ம ஓட்டமும் சுழல் எனப்படும். ஒரு மையத்தைச் சுற்றி வெகு வேகமாக ஏற்படும் பாய்ம ஓட்டம் சுழிப்பு எனப்படும். தானாக ஏற்படும் சுழலின் மையத்தில் பாய்மத்தின் சுழலும் வேகம் அதிகமாகவும் மையத்திலிருந்து விலகிச் செல்லும்போது வேகம் குறைவாகவும் இருக்கும். ஏற்படுத்தப்படும் சுழலில் இதற்கு நேர்மாறாக இருக்கும். இருவகை சூழல்களிலும் மையத்தில் அழுத்தம் குறைவாக இருக்கும். தானாக ஏற்படும் சுழலில் மையத்தில் அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும்.