தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகம்
வகை | மகளிர், மாநிலப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1924 2022 (பல்கலைக்கழகமாக) | (உசுமானியப் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி)
அமைவிடம் | கோதி முதன்மைச் சாலை, எசாமியா பசார் , , , 500095 , 17°23′01″N 78°29′11″E / 17.3837299°N 78.4863937°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www |
தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகம் (Osmania University College for Women) முன்பு உசுமானியா பல்கலைக்கழக மகளிர் கல்லூரி என வழங்கப்பட்டது. இது இந்தியாவின் ஐதராபாத்து நகரில் உள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம். இது முன்னர் உசுமானியா பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியாக இருந்தது. இந்தியாவில் பிரித்தானியப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இந்த கல்லூரியின் முக்கிய கட்டிடம், அழகியல், கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுச்சின்னமாக உள்ளது. 1803ஆம் ஆண்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற ஜே. ஏ. கிர்க்பாட்ரிக், மதராசு பொறியியலாளர்களின் படைத்தளபதி சாமுவேல் ரஸ்ஸல் என்பவர் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்குப் போட்டியாக ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்.[1]
வரலாறு
[தொகு]இது கல்லூரியாக 1924-ல் தொடங்கப்பட்டது. 1939-ல், கல்லூரி கோல்டன் த்ரெஷோல்டுக்கு மாற்றப்பட்டது.[2] பின்னர் 1949-ல் ஜேம்சு அகில்லெசு கிர்க்பாட்ரிக் மாளிகையான கோடி ரெசிடென்சிக்கு சொந்தமான இதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.
2022-ல், இக்கல்லூரியானது தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது.[3] இப்பல்கலைக்கழகம் மகளிருக்கானப் பொறியியல் படிப்புகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.[4]
வளாகம்
[தொகு]இந்த வளாகம் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[5]
கல்வி
[தொகு]மகளிர் கல்லூரி பெண்களுக்கான பட்டதாரி மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது.
பட்டமளிப்பு விழாக்கள்
[தொகு]கல்லூரியின் XIVவது பட்டமளிப்பு விழா 4 அக்டோபர் 2018 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்றது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
- ↑ Rani, E. Sudha (2015). "WOMEN'S EDUCATION IN HYDERABAD STATE – PUBLIC AND PRIVATE INSTITUTIONS". Proceedings of the Indian History Congress 76: 521–531. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44156617.
- ↑ "University College for Women renamed as Telangana Mahila Viswavidyalayam". www.thehansindia.com (in ஆங்கிலம்). 2022-07-18. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
- ↑ Today, Telangana (2022-04-30). "Telangana Women's University plans emerging tech courses". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
- ↑ Reddy, R. Ravikanth (2022-01-20). "New colleges trigger women's varsity decision" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/new-colleges-trigger-womens-varsity-decision/article38299231.ece.