தெய்வத் திருமணங்கள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெய்வத் திருமணங்கள் என்பது 1981 மார்ச் 6 இல் இந்து தொன்மவியல் சார்ந்து வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மூன்று இறைவனது திருமணங்கள் மூன்று கதைகளாக இருந்தன. ஒவ்வொரு கதையும் தனி இயக்குனர், தனி இசையமைப்பாளரால் எடுக்கப்பட்டது.

மூன்று கதைகள்[தொகு]

இப்படத்தில் இந்து சமயக் கடவுள்களின் மூன்று திருக்கல்யாணங்கள் மூன்று தனிக் கதைகளாக எடுக்கப்பெற்று, ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.

கதை இயக்குநர் இசையமைப்பாளர்
மீனாட்சி திருமணம் ப. நீலகண்டன் கே. வி. மகாதேவன்
வள்ளித் திருமணம் கே.காமேஸ்வர ராவ் ஜி. கே. வெங்கடேஷ்
திருமால் திருமணம் கே. சங்கர் எம். எஸ். விஸ்வநாதன்

மீனாட்சி திருமணம்[தொகு]

முதலாவது கதை, மீனாட்சி திருமணம். இதில் நடிகை லதா, மீனாட்சியாகவும், மோகன் சிவபெருமானாகவும் நடித்திருந்தனர்.[1]

சீனிவாச திருமணம்[தொகு]

இரண்டாவது கதை, சீனிவாச திருமணம். இதில் ரவிகுமார், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

வள்ளி திருமணம்[தொகு]

மூன்றாவது மற்றும் இறுதிக் கதை, வள்ளித் திருமணம். இதில் வள்ளியாக ஸ்ரீதேவியும், முருகனாக ராஜ்குமாரும் நடித்திருந்தனர்.[1]

இத்திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாள் பாடிய பாடல் இடம்பெற்றிருந்தது. அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இவற்றையும் காண்க[தொகு]

திருக்கல்யாணம்

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ஒரே முகூர்த்தத்தில் மூன்று திருமணங்கள் - உமா ஷக்தி - தினமணி 22 ஏப்ரல் 2016