உள்ளடக்கத்துக்குச் செல்

தென்றலும் புயலும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்றலும் புயலும்
இயக்கம்எம். ஏ. கபூர்
தயாரிப்புமருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
திரைக்கதைஎஸ். ஆர். வேதநாயகம்
இசைரீ. பத்மநாதன்
நடிப்புசிவபாதவிருதையர்
ஹெலன்குமாரி
சாம்பசிவம்
எஸ். ஆர். வேதநாயகம்
சித்தி அமரசிங்கம்
கே. ஏ. ஜவாஹர்
டீன் குமார்
செல்வம் பெர்னாண்டோ
சந்திரகலா
எஸ். என். தனரத்தினம்
ஜோபு நஷீர்
ஒளிப்பதிவுஎம். ஏ. கபூர்
படத்தொகுப்புஅலிமான்
விநியோகம்ராஜேஸ்வரி பிலிம்ஸ்
வெளியீடு12 ஏப்ரல் 1978
நாடுஇலங்கை
மொழிதமிழ்

தென்றலும் புயலும் 1978 ஆம் ஆண்டில் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அவ்வாண்டில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் எம். ஏ. கபூர் ஒளிப்பதிவையும், இயக்கத்தையும், அலிமான் படத் தொகுப்பையும் செய்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் திருகோணமலையைச் சேர்ந்த சண்முகப்பிரியா. அதே ஊரைச் சேர்ந்த ரி. பத்மநாதன் இசையமைத்தார். இவரே நிர்மலா திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். முத்தழகு, பேர்டினண்ட் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.[1]

  • இயற்கை மகள் எழுதும் கவிதையிலே.. (பாடியவர்: சுஜாதா அத்தநாயக்க)
  • துணை தேடி வந்தது ஒரு பறவை.. (பாடியவர்: எஸ். கலாவதி)
  • சந்திர வதனத்தில் இந்த நீலப்பூ.. (பாடியோர்: வி. முத்தழகு, எஸ். கலாவதி)
  • அரும்பான ஆசை நெஞ்சில்... (வி. முத்தழகு)
  • அவள் தான் என்னுயிர்க் காதலி... (பெர்டினண்ட் லோப்பஸ்)

குறிப்பு[தொகு]

  • யாழ்ப்பாணத்தில் சமகாலத்தில் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது அரிதாகும்.
  • இத்திரைப்படத்தில் பின்னணி பாடிய பேர்டினண்ட் லோபஸ் தான் "நிர்மலா" படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடலான "கண்மணி ஆடவா" என்ற பாடலைப் பாடியவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 திரைப்பட சாதனையாளர்கள், தம்பிஐயா தேவதாஸ், வீரகேசரி, 11 ஆகத்து 2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றலும்_புயலும்&oldid=3670593" இலிருந்து மீள்விக்கப்பட்டது