கே. ஏ. ஜவாஹர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழும்பில் வாழ்ந்த சிறந்த மேடை, திரைப்பட நடிகர். நீண்ட காலம் கலைத்துறையில் பணியாற்றிய இவருக்கு கிழக்கு பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடற்குரியது.

மேடைநாடகத்துறையில்[தொகு]

முதலாவது மேடை நாடகம் - 1964ல் புரட்சிமணி இயக்கிய "ஒருத்தி சொன்னாள்". தொடர்ந்து பல மேடை நாடக்ங்களில் நடித்துள்ளார். 1969ல் தினகரன் நாடகவிழாவில் "வாடகைக்கு அறை", "மனிததர்மம்" ஆகிய நாடகங்களில் நடித்து சிறந்த துணைநடிகருக்கான விருதினைப் பெற்றார். 1974ல் தேசியநாடகவிழாவில் சுஹேர் ஹமீட்டின் இயக்கத்தில் " பிள்ளை பெற்ற ராசா ஒரு நாயை வளர்த்தார் " என்ற நாடகத்தில் நடித்து சிறந்த நடிகர் விருதினைப் பெற்றவர்.

வானொலியில்[தொகு]

இலங்கை வானொலியில் முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களில் நடித்தவர்.

ஒலிநாடாக்கள்[தொகு]

"அபூநானா" என்ற பாத்திரத்தில் இவர் நடித்த ஐந்து நகைசுவை நாடகங்கள் ஒலிநாடாக்களாக வெளிவந்துள்ளன.

திரைப்படங்களில்[தொகு]

இவரது முதலாவது திரைப்படம் வி.பி.கணேசன் தயாரித்த 'புதியகாற்று' என்ற திரைப்படமாகும்.

தொடர்ந்து 'வாடைக்காற்று' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடித்து பாராட்டு பெற்றவர். 'கோமாளிகள்', 'நான் உங்கள் தோழன்', 'ஏமாளிகள்', 'தென்றலும் புயலும்', 'தெய்வம் தந்த வீடு', , 'ஷர்மிளாவின் இதய ராகம்' போன்ற பல படங்களில் நடித்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._ஜவாஹர்&oldid=3281941" இலிருந்து மீள்விக்கப்பட்டது