தெய்வம் தந்த வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெய்வம் தந்த வீடு
இயக்கம்வில்பிரட் சில்வா]]
தயாரிப்புவி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை
கதைஏ. ரகுநாதன்
திரைக்கதைபேராதனை ஏ.ஜுனைதீன்
இசைஎம்.கே.ரொக்சாமி, கண்ணன் - நேசம்
நடிப்புஏ. ரகுநாதன்
குமுதினி
டீன் குமார்
கே. ஏ. ஜவாஹர்
சந்திரகலா
எஸ். விஸ்வநாதராஜா
ஹரிதாஸ்
சுப்புலட்சுமி காசிநாதன்
ஜெயதேவி
வி.சிவபாலன்
ஒளிப்பதிவுஎம். ஏ. கபூர்
விநியோகம்லிபேட்டி பிலிம்ஸ்
வெளியீடு1978
நாடுஇலங்கை
மொழிதமிழ்

தெய்வம் தந்த வீடு (Deivam Thandha Veedu) 1978ல் திரையிடப்பட்ட இலங்கைத்திரைப்படமாகும். இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படமான "தெய்வம் தந்த வீடு" திரைப்படத்தை தயாரித்தவர் ஹட்டன் வி. கே. டி. பொன்னுசாமிப்பிள்ளை என்ற தொழிலதிபர்.

"தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் சாயலில் ஒரு நாதஸ்வரக்கலைஞனுக்கும், ஒரு நாட்டியக்கலைஞருக்கும் ஏற்படும் காதலை சித்தரிக்கும் இதன் கதையை எழுதிய ஏ.ரகுநாதனே பிரதான பாத்திரத்தில் நாதஸ்வரக்கலைஞராக நடித்தார். திரைக்கதை வசனங்களை பேராதனை ஜுனைதீன் எழுதினார். நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா) நடித்தார்.

துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ். என். தனரத்தினம், கே. ஏ. ஜவாஹர், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, சுப்புலட்சுமி காசிநாதன், ஜெயதேவி, பிரான்சிஸ் ஜெனம், வி.சிவபாலன், ஹரிதாஸ், சுதுமலை தம்பிராச, நெயினார், றெமீசியஸ், தேவராஜா போன்ற பலர் நடித்தார்கள்.

பல தென்னிந்திய இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குனர் வில்பிரட் சில்வா இயக்குனராக பணியாற்றினார். இவரோடு இணை இயக்குனராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். எம். கே. ரொக்சாமி, கண்ணன், நேசம் தியாகராசா மூவரும் இசையமைப்பளர்களாக நியமிக்கப்பட்டனர். வீரமணி ஐயர், அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை, சிறீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், நிறைய தமிழ், சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றிய மன்னாரைச் சேர்ந்த எம்.ஏ.கபூர் ஆவார்.

சிறப்புத் தகவல்கள்[தொகு]

  • பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசை இப்படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வம்_தந்த_வீடு&oldid=3358050" இருந்து மீள்விக்கப்பட்டது