துருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஷ்ணு பகவான் துருவனுக்கு காட்சி அளித்தல், ராஜா ரவி வர்மாவின் ஓவியம்

துருவன் (ஆங்கிலம்; Dhruv), (சமசுகிருதம்: ध्रुव) இந்து சமயம் கூறும் விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் ஆகிய புராணங்களில் காணப்படும் ஒரு கதாபாத்திரம். துருவன் உத்தானபாத மன்னனுக்கும் சுநீதிக்கும் பிறந்தவன். உத்தானபாதனின் இரண்டாம் மனைவி சுருசியின் மகன் உத்தமன். உத்தானபாதனுக்கு சுநீதியை விட சுருசி மீதும் உத்தமன் மீதும் அன்பு அதிகம். ஒரு நாள் துருவனை மன்னன் உத்தானபாதன், தன் மடியில் அமர்த்தி முத்தமிட்டான். அதைக் கண்ட சுருசி கோபமடைந்து துருவனை விரட்டி அடித்தாள். துருவனும் அழுதபடி துயரத்துடன் வீட்டை விட்டு வெளியேறி காட்டிற்கு தவமிருக்கச் சென்றான்.

நாரதரின் அறிவுரைப்படி, துருவன் மகா விஷ்ணுவை நோக்கி காட்டில் கடும் தவம் இயற்றினான். ஒரு நாள் விஷ்ணு பகவான் துருவனுக்கு நேரில் காட்சியளித்தார். துருவனை பார்த்து, ”சாதாரண மனிதனும் கடவுளே. ஒவ்வொரு உயிர்களிடத்தில் கடவுள் இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் தமது செயலாலும், ஆத்ம ஞானத்தாலும் கடவுளாக முடியும்” என்று உபதேசித்தார். ஆத்ம ஞானம் பெற்ற துருவன் மனமகிழ்வுடன் தவத்தை முடித்து எழுந்து நாடு திரும்பினான்.[1]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவன்&oldid=2577386" இருந்து மீள்விக்கப்பட்டது