துமேடியா
Appearance
துமேடியா | |
---|---|
மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | திமாலிடே
|
பேரினம்: | துமேடியா பிளைத், 1852
|
மாதிரி இனம் | |
துமேடியா கைபெரித்ரா (மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன்) பிராங்லின், 1831 | |
சிற்றினம் | |
|
துமேடிய (Dumetia) என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் பழைய உலக சிலம்பன் குடும்பமான துமாலிடேயில் உள்ள பசாரைன் பறவைக் குடும்பச் பேரினமாகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]1852ஆம் ஆண்டு இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் எட்வர்ட் பிளைத் என்பவரால் துமேடியா பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இப்பேரினத்தின் பெயர் இலத்தீன் சொல்லான டுமேட்டம் என்பதிலிருந்து பெறப்பட்டது. டுமெட்டி என்றால் "அடர்" என்று பொருள்.[2] பிளைத் இந்தப் பேரினத்தில் இரண்டு சிற்றினங்களைப் பட்டியலிட்டார். இவற்றில் ஜோர்ஜ் இராபர்ட் கிரே 1855-இல் மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பனை மாதிரி இனமாகத் தேர்ந்தெடுத்தார். [3] [4]
சிற்றினங்கள்
[தொகு]இப்பேரினமானது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
படம் | பொதுப் பெயர் | அறிவியல் பெயர் | பரவல் |
---|---|---|---|
மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் | துமேடியா கைபெரித்ரா | வட-மத்திய முதல்இந்தியா, இலங்கை வரை | |
கருந்தலை சிலம்பன் | துமேடியா அட்ரிசெப்பசு | மேற்கு இந்தியா முதல் இலங்கை வரை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Blyth, Edward (1852). Catalogue of the Birds in the Museum Asiatic Society. Calcutta: J. Thomas. p. 140. Although the title page is dated 1849, the book was not published until 1852. See: Dickinson, E.C. (2011). Priority! The Dating of Scientific Names in Ornithology: a Directory to the literature and its reviewers. Northampton, UK: Aves Press. p. 74.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 142.
- ↑ Gray, George Robert (1855). Catalogue of the Genera and Subgenera of Birds Contained in the British Museum. London: British Museum. p. 45.
- ↑ Check-List of Birds of the World. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1964. p. 317.