ஜோர்ஜ் இராபர்ட் கிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் இராபர்ட் கிரே
George Robert Gray

அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர்
பிறப்பு8 சூலை1808
லிட்டில் செசுலா, இலண்டன், இங்கிலாந்து
இறப்பு6 மே 1872(1872-05-06) (அகவை 63)
துறைபறவையியல், பூச்சியியல்
பணியிடங்கள்பிரித்தானிய அருங்காட்சியகம்
அறியப்படுவதுஜெனிரா ஆப் பேர்ட்சு (பறவைப் பேரினம்), லெப்பிடாப்பிடிரா விளக்கம்
Author abbrev. (zoology)ஜோ. இரா. கிரே
படம்: சௌனா சாவாரியா . ஜெனரா ஆப் பேர்ட்ஸில் இருந்து

ஜோர்ஜ் இராபர்ட் கிரே (George Robert Gray)(8 சூலை 1808 - 6 மே 1872) என்பவர் இங்கிலாந்தினைச் சேர்ந்த விலங்கியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் நாற்பதொரு ஆண்டுகளாக இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தின் (இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்) பறவையியல் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் விலங்கியல் நிபுணர் ஜான் எட்வர்ட் கிரேயின் இளைய சகோதரர் மற்றும் தாவரவியலாளர் சாமுவேல் பிரடெரிக் கிரேயின் மகன்.

ஜோர்ஜ் கிரேயின் மிக முக்கியமான வெளியீடு டேவிட் வில்லியம் மிட்செல் மற்றும் ஜோசப் வுல்ப் ஆகியோரால் விளக்கப்பட்ட இவரது ஜெனரா ஆப் பேர்ட்ஸ் (பறவைகளின் பேரினம்)(1844-49) ஆகும். இதில் 46,000 குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கை[தொகு]

பாசுமா பேரினம் குறித்த தனிக்கட்டுரையில்,எக்சுடாடோசோமா டைரட்டம் (படம் 8)

கிரே இலண்டனில் உள்ள லிட்டில் செல்சியாவில் இயற்கை ஆர்வலர் மற்றும் மருந்தியல் வல்லுநர் சாமுவேல் பிரடெரிக் கிரே மற்றும் அவரது மனைவி எலிசபெத் (நீ போர்பீட்) ஆகியோருக்குப் மகனாகப் பிறந்தார்.[1] கிரே மெர்ச்சன்ட் டெய்லர் பள்ளியில் படித்தார்.[2]


கிரே 1831-இல் விலங்கியல் பிரிவின் உதவி காப்பாளராகப் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் தனது பணியினைத் தொடங்கினார்.

இவர் பூச்சிகளைப் பட்டியலிடுவதன் மூலம் தனது வகைப்பாட்டியல் பணியினைத் தொடங்கினார். மேலும் ஆத்திரேலியாவின் பூச்சியியல் (1833) நூலினை வெளியிட்டார். ஜார்ஜஸ் குவியரின் விலங்கு இராச்சியத்தின் ஆங்கில பதிப்பிற்கு பூச்சியியல் பகுதியில் பங்களிப்பு செய்தார். லெபிடோப்டெராவின் பல பேரினங்களை கிரே விவரித்தார். 1833ஆம் ஆண்டில், இவர் இலண்டனின் அரச பூச்சியியல் சமூகமாக மாறியதன் நிறுவனர் ஆவார்.

1960-இல் வெளியிடப்பட்ட, கிரேவின் வெட்டுக்கிளி வார்ப்ளர் பற்றிய கிரேயின் அசல் விளக்கம், இவருக்குப் பெயரினைப் பெற்றுத் தந்தது. மலுக்கு தீவில் உள்ள ஆல்பிடுட் அரசல் வாலேசு என்பவரால் இந்த மாதிரி சேகரிக்கப்பட்டது. வால்புற உணர்த்திகள் பற்றிய கிரேயின் படைப்புகளைக் கையாளும் ஒரு சுருக்கமான சுயசரிதையில், ப்ராக்[3] மூன்று வெளியீடுகளுடன் (1833, 1835 மற்றும் 1843 இல்) பெயரிடப்பட்ட பாஸ்மிட் சிற்றினங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு கிரே, பெருமை சேர்த்துள்ளார். கிரே மூன்று வகையான வால்புற உணர்த்திகளுக்குப் பெயரிட்டார்.

வெளியீடுகள்[தொகு]

  • 1831 The Zoological Miscellany Zool. Miscell. (1): [1] 1–40
  • 1833 The Entomology of Australia, in a series of Monographs. Part I. The Monograph of the Genus Phasma. London.
  • 1835 Synopsis of the species of insects belonging to the family of Phasmidae. London, Longmans. 48pp.
  • 1844 List of the specimens of birds in the collection of the British Museum. London, Trustees of the British Museum.
  • 1846 Descriptions and Figures of some new Lepidopterous Insects chiefly from Nepal. London, Longman, Brown, Green, and Longmans.
  • 1843 Description of several species of the genus Phyllium. Zoologist, (1)1: 117–123.
  • 1852 Catalogue of Lepidopterous Insects in the British Museum. Part 1. Papilionidae. [1853 Jan], "1852" iii + 84pp., 13pls.
  • 1871 A fasciculus of the Birds of China. London, Taylor and Francis.
  • with Richard Bowdler Sharpe, The Zoology of the Voyage of HMS Erebus & HMS Terror. Birds of New Zealand., 1875. The revised edition of Gray (1846) (1875).

மேற்கோள்கள்[தொகு]

 1. "Gray, George Robert (1808–1872)". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/11337.  (Subscription or UK public library membership required.)
 2. "The Royal Society, Library and Archive catalogue". Archived from the original on 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
 3. Bragg, P.E. (2007) Biographies of Phasmatologists – 2. George Robert Gray. Phasmid Studies, 15(1&2) 5–9.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
George Robert Gray
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_இராபர்ட்_கிரே&oldid=3869099" இலிருந்து மீள்விக்கப்பட்டது