துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:13, 23 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
1917ல் செர்பிய புரட்சியாளர்கள் ஆஸ்திரிய படைவீரர்களால் சுட்டுக்கொல்லப்படும் காட்சி

துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வழக்கம். துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் அம்புகள் எய்து குற்றம் சாட்டப்பட்டவரைக் கொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அப்பழக்கமே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பழக்கமாக மாறியது. தண்டனையை நிறைவேற்ற படைவீரர்களால் அல்லது காவல்துறையினரால் ஒரு சுடு குழு உருவாக்கப்படுகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் துப்பாக்கி விசையை அழுத்தி குற்றவாளியை நோக்கிச் சுடுகின்றனர். பொதுவாக குற்றவாளியின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் சுடு குழுவின் முன் நிறுத்தப்படுகிறார். சட்டம் ஒழுங்கு மீறலுக்கும், படைகளில் பொறுப்பைவிட்டு ஓடியவர்களுக்கும் இம்முறையில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. உலகின் பல நாடுகள் இன்னும் இப்பழக்கத்தைப் பின்பற்றுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுடு குழு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.