துடுப்பாட்டத்தின் வரலாறு
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் துடுப்பாட்ட விளையாட்டு அறியப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது 18-ஆம் நூற்றாண்டில் நாட்டில் பரவலாக அறியப்பட்ட விளையாட்டாக மாறியது, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் உலகளவில் கவனத்தைப் பெற்றது. சர்வதேச போட்டிகள் 19-ஆம் நூற்றாண்டிலிருந்து விளையாடப்பட்டு வருகின்றன, மேலும் முறையான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் 1877 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றன. கால்பந்து கூட்டமைப்பிற்கு அடுத்ததாக துடுப்பாட்டம் தான் அதிக பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டாகும்.[1]
சர்வதேச அளவில், துடுப்பாட்டப் போட்டிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள் உறுப்பினர்களாக உள்ளன, இருப்பினும் தற்போது பன்னிரெண்டு அணிகள் மட்டுமே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளை விளையாடுகின்றன.
விளையாட்டின் விதிகள் " துடுப்பாட்ட விதிகளில் " வரையறுக்கப்பட்டுள்ளன. இது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய பல வடிவங்களைக் கொண்டுள்ளது.
ஆரம்ப காலம்
[தொகு]சாக்சன் அல்லது நோர்ம்மானியர் காலத்தில், கென்ட் மற்றும் சசெக்ஸ் முழுவதும் அமைந்துள்ள தென்கிழக்கு இங்கிலாந்தில் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் வெட்டவெளிகள் கொண்ட வேல்டில் வசிக்கும் குழந்தைகளால் துடுப்பாட்டம் உருவாக்கப்பட்டது. [2] திட்டவட்டமான முதல் எழுதப்பட்ட குறிப்பு 16-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் கண்டரியப்பட்டது.
முதல் குறிப்பு
[தொகு]1597 இல் (பழைய பாணி - 1598 புதிய பாணி) இங்கிலாந்தில் சர்ரே, கில்ட்ஃபோர்டில் உள்ள பொதுவான நில உரிமை தகராறு தொடர்பான வழக்கில், துடுப்பாட்டம் விளையாட்டைப் பற்றி முதல் திட்டவட்டமான குறிப்பு இருந்தது. ஜான் டெரிக் என்ற 59 வயதான மரண விசாரணை அதிகாரி, தானும் தனது பள்ளி நண்பர்களும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இராயல் இலக்கணப் பள்ளியில் படித்தபோது. துடுப்பாட்டம் விளையாடியதாக சாட்சியம் அளித்தார். இதன் மூலம் 1550 ஆம் ஆண்டு சர்ரேயில் துடுப்பாட்டம் விளையாடப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது, உலகளவில் இந்த விளையாட்டின் ஆரம்பகால ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பு இதுவாகும். [3] [4]
18-ஆம் நூற்றாண்டு
[தொகு]சூதாட்டம் மூலமாக துடுப்பாட்டம் வளரத் தொடங்கியது. ஏனெனில், சூதாட்டக்காரர்கள் சிலர் தங்கள் சொந்த அணிகளை உருவாக்குவதன் மூலம் தங்களது சூதாட்டத்தினை வலுப்படுத்திக்கொள்ள இயலும் என நம்பினர். 1660 ஆம் ஆண்டில் மறுசீரமைப்பிற்குப் பிறகு முதல் "கவுண்டி (மாவட்ட) அணிகள்" உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[5]
19-ஆம் நூற்றாண்டு
[தொகு]முதன்முறையாக மாவட்டச் சங்க அணிகள் உருவானதன் மூலம் இந்த விளையாட்டு அமைப்பின் அடிப்படை மாற்றத்திற்கும் உட்பட்டது. 1839 இல் சசெக்ஸில் தொடங்கி அனைத்து நவீன காலச் சங்க அணிகளும் 19 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. வில்லியம் கிளார்க் 1846 ஆம் ஆண்டில் டிராவல்லிங் ஆல்-இங்கிலாந்து லெவனை உருவாக்கியது. மாவட்டத் துடுப்பாட்டச் சங்கங்கள், தங்களை நிலைநிறுத்திக் கொண்ட உடனேயே, அவர்கள் "துடுப்பாட்ட வீரர் ஏலத்தினை" எதிர்கொண்டனர். வணிக முயற்சியாக இருந்தாலும், உயர்தர துடுப்பாட்ட வீரர்கள் இதற்கு முன் வருகை தராத மாவட்டங்களில் விளையாட்டை பிரபலப்படுத்த இது உதவியது. இதேபோன்ற பிற அணிகளும் உருவாக்கப்பட்டன, இந்த நடைமுறை சுமார் முப்பது ஆண்டுகள் நீடித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World's Most Popular Sports by Fans". www.topendsports.com. Archived from the original on 28 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-09-28.
- ↑ Wynne-Thomas, Peter (1997). From the Weald to the World. Stationery Office Books.
- ↑ Altham, p. 21.
- ↑ Underdown, p. 3.
- ↑ Altham, p. 21.
வெளியிணைப்புகள்
[தொகு]- "BBC News – Today – Audio slideshow: 'Swinging Away'". BBC Online. 20 May 2010. http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8693000/8693097.stm.
- "Cric History". CricHistory.in. 31 Aug 2022. https://crichistory.in/.