உள்ளடக்கத்துக்குச் செல்

தீரஜ் பொம்மதேவரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீரஜ் பொம்மதேவரா
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு4 செப்டம்பர் 2001 (2001-09-04) (அகவை 23)
விசயவாடா, ஆந்திரம்
தொழில்விற்கலை
பதக்கத் தகவல்கள்

தீரஜ் பொம்மதேவரா (Dhiraj Bommadevara, பிறப்பு 4 செப்டம்பர் 2001) என்பவர் ஒரு இந்தியர் வில்வித்தை வீரர் ஆவார். [1] இவர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.[2] தீரஜ் உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், உலக இளையோர் வாகையர் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஆந்திராவின், விசயவாடாவைச் சேர்ந்தவர் தீரஜ். இவரது தந்தை பொம்மதேவர சரவண் குமார் இந்திய வில்வித்தை சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தார். விஜயவாடாவில் உள்ள எஸ்ஆர்ஆர் மற்றும் சிவிஆர் அரசு பட்டயக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார்.[3] 2006ஆம் ஆண்டு விஜயவாடாவில் உள்ள வோல்கா வில்வித்தை அகாதமியில் வில்வித்தையை பயிறிசி பெறத் தொடங்கினார். புனேவில் உள்ள இராணுவ விளையாட்டு கல்வி நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்று, 2021ல் ஹவால்தார் பதவிபெற்று இராணுவத்தில் இணைந்தார்.[3] இவர் ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட்டின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

தொழில்

[தொகு]

2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவின் சார்பில் போட்டியிட தீராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் அட்டானு தாசு, துஷார் ஷெல்கேவுடன் இணைந்து இந்திய ஆடவர் வில்வித்தை அணியில் பங்கேற்று 2022 ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[5][6][7] அவர்கள் கொரியா குடியரசிடம் இறுதிப் போட்டியில் தோற்றனர்.[8][9]

2021 ஆம் ஆண்டில், குவாத்தமாலாவின், குவாத்தமாலா நகர் மற்றும் பிரான்சின் பாரிரிசில் நடந்த உலகக் கோப்பைகளில் ஆண்கள் தனிநபர் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.[10]

முன்னதாக 2022 ஜனவரியில், ஐதராபாத்தில் நடந்த தரவரிசைப் போட்டியில் அவர் தோற்கடித்தார் தோக்கியோ ஒலிம்பியன் தருண்தீப் இராயை தோற்கடித்தார்.[11]

பின்னர் 2023 இல், ஜெர்மனியின் பெர்லினில் நடந்த உலக வாகையர் போட்டிகளில் ஆடவர் அணியிலும், கலப்பு குழு நிகழ்வைத் தவிர தனிப்பட்ட போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் விளையாடினார்.[12] அதே ஆண்டில், துருக்கியின் ஆந்தாலியாவில் நடந்த உலகக் கோப்பையில் ஆண்கள் அணி மற்றும் ஆடவர் தனிநபர் போட்டிகளிலும், பாரிஸ், பிரான்ஸ், சீனாவின் சாங்காய் ஆகிய இடங்களில் நடந்த உலகக் கோப்பைகளில் ஆண்கள் தனிநபர் மற்றும் கலப்பு அணிப் போட்டிகளிலும் கலந்துகொண்டார். 2023 இல் நடந்த அடுத்த நிகழ்வில், கொலம்பியாவின் மெதெயில் நடந்த உலகக் கோப்பை ஸ்டேஜ் 3 இல் ஆண்கள் அணி மற்றும் ஆண்கள் தனிநபர் போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.[13][14] 2023 செப்டம்பரில், ஹெர்மோசிலோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொண்டார்.[15]

2024 கோடைக்கால ஒலிம்பிக்

[தொகு]

2024 கோடை ஒலிம்பிக் போட்டியில் திராஜ் முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். தரவரிசைச் சுற்றில், திராஜ் 4வது இடத்தைப் பிடித்தார் (681 மதிப்பெண்களுடன்), இது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வில் வீரர் அடைந்த சிறந்த தரவரிசைகளில் ஒன்றாகும். இருப்பினும், ஆண்களுக்கான தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்றில் இவர் 5-6(5+) என்ற கணக்கில் கனடாவின் எரிக் பீட்டர்ஸிடம் தோற்றார். இதனையடுத்து ஆண்கள் அணியில் பிரவின் ஜாதவ் மற்றும் தருண்தீப் இராய் ஆகியோருடன் திராஜ் காலிறுதிக்கு முன்னேறினார். எனினும் அந்த அணி 2-6 என்ற கோல் கணக்கில் துருக்கி துருக்கி அணியிடம் தோல்வியடைந்தது. கலப்பு அணி வில்வித்தையில் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் சார்பில் முதன் முதலில் ஒலிம்பிக் பதக்கப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் அங்கிதா பகத்துடன் புதிய வரலாற்றை தீராஜ் படைத்தார். ஆனால் அமெரிக்க அணியிடம் 2-6 என்ற கணக்கில் தோற்றார் .[16][17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dhiraj Bommadevara | World Archery". www.worldarchery.sport (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  2. UtkarshClasses. "Archery World Cup 2024: Dhiraj Bommadevara Wins Bronze Medal". Utkarsh Classes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
  3. 3.0 3.1 Padmadeo, Vinayak (2023-01-14). "Armyman Dhiraj Bommadevara on target, breaks WR in archery trials". wwwtribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  4. "Full list of Indian athletes for Asian Games 2023". Firstpost (in ஆங்கிலம்). 2023-08-26. Archived from the original on 27 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  5. ANI (2023-10-06). "India men's archery recurve team finishes with silver medal". www.business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
  6. Malik, Varun; News, India TV (2023-10-06). "Asian Games 2023: Atanu Das, Dhiraj Bommadevara, Tushar Shelke bag Silver medal in recurve archery final". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-06. {{cite web}}: |last2= has generic name (help)
  7. "Asian Games 2023: India settle for silver in recurve men's team event in archery after losing to South Korea". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
  8. Chettiar, Ronald (2023-10-06). "Indian men's recurve team wins silver medal; women bag bronze". www.olympics.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
  9. Desk, The Bridge (2023-10-06). "Asian Games 2023: Recurve Men's team wins historic silver". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
  10. "Indian archers bag two bronze medals in World Cup Stage 4". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-17. பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  11. "National archery: Sukhchain Singh clinches recurve title". The Times of India. 2022-01-09. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257 இம் மூலத்தில் இருந்து 8 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230508224108/https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/national-archery-sukhchain-singh-clinches-recurve-title/articleshow/88796111.cms. 
  12. "Failure a perfect target practice for archer Dhiraj". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  13. "World Cup Stage 3: Indian archers win men's recurve team bronze medal". Firstpost (in ஆங்கிலம்). 2023-06-16. Archived from the original on 21 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  14. "World Cup Stage 3: Indian archers win recurve team bronze". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  15. PTI (2023-09-11). "Dhiraj loses bronze play-off, India returns with a silver from Archery World Cup Final". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  16. "Ankita Bhakat and Dhiraj Bommadevara miss medal by a whisker but script history for Indian archery in Paris Olympics". www.hindustantimes.com. Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2 August 2024.
  17. "BHAKAT Ankita". olympics.com. olympics.com. பார்க்கப்பட்ட நாள் 2 August 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரஜ்_பொம்மதேவரா&oldid=4141615" இலிருந்து மீள்விக்கப்பட்டது