உள்ளடக்கத்துக்குச் செல்

தீபா கர்மாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபா கர்மாகர்
தனித் தகவல்கள்
முழுப் பெயர் தீபா கர்மாகர்
நாடு  இந்தியா
உயரம் 4 அடி 11 அங்
வகை பெண்கள் கலையாற்றல்
நிலை மூத்த உறுப்பினர்
பன்னாட்டு குழு
தலைமைப் பயிற்சியாளர்(கள்) பிஸ்வாஸ்வர் நந்தி

தீபா கர்மாகார் (வங்காள மொழி: দিপা কর্মকার; பிறப்பு 9 ஆகத்து 1993, அகர்தலா) என்பவர் ஒரு இந்திய கலைநய சீருடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்) விராங்கனையாவார். இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவின் சார்பாக 2016 கோடை ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே சீருடற்பயிற்சி மெய்வல்லுநர் ஆவார். ஒலிம்பிக் போட்டியொன்றில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற முதல் பெண் சீருடற்பயிற்சியாளரும் இவரேயாவார்.[1][2] இரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் போட்டியில் குதிரை தாவுதல் போட்டியில் 15.066 புள்ளிகள் எடுத்து நான்காவதாக வந்தார்; மூன்றாவதாக வந்த சுவிட்சர்லாந்தின் கியுலியா இசுடெய்ன்கிருபர் பெற்ற 15.216ஐ விட 0.015 புள்ளிகளில் மயிரிழையில் வெங்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.[3]

இவர்  2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்று தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இந்திய விளையாட்டு வரலாற்றில் இந்தச் சாதனைபடைத்த முதல் பெண் சீருடற்பயிற்சி வீராங்கனை இவரேயாவார்.[4]. மேலும் இவர் புராடுநோவா என்னும் ஆபத்தான விளையாட்டான அந்தரத்தில் இரண்டு குட்டிக்கரணங்கள் போட்டு கால்பதிக்கும் விளையாட்டில் இதுவரை வெற்றிகரமாக விளையாடி முடித்த ஐந்து பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். மேலும், இவர் பங்குபெற்ற போட்டிகளில் அதிகபட்சமாக (15.100) புள்ளிகள் எடுத்துச் சாதனைப் புரிந்துள்ளார்.[5] மேலும் இவர் 2015 ஆண்டு சப்பானில் நடந்த ஏ.ஆர்.டி.ஆசிய சீருடற்பயிற்சி போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தச் சாதனைகள் மூலமாக இந்தியாவில் சீருடற்பயிற்சியில் மிக இளவயதில் சாதனைப் படைத்தவர்.[6] ஏப்ரல் 2016 அன்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் சீருடற்பயிற்சி விளையாடுக்காகக் கலந்து கொள்ளத் தகுதி சுற்றில் 52.698 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக்கில் கந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றார்.[2] இதன்மூலம் கடந்த 52 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து சீருடற்பயிற்சி விளையாட்டில் கலந்துகொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவரானார்.[7]

2016 ஒலிம்பிக் போட்டி

[தொகு]

2016 ஒலிம்பிக்கில் புராடுநோவா பிரிவில் கலந்து கொண்ட தீபிகா தகுதிச்சுற்றில் மிக சிறப்பாகச் செயல்பட்டு 14.833 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் சீருடற்பயிற்சி பிரிவின் இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தப் போட்டியில் நாகாகாவது இடத்தைப் பிடித்து நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

அங்கிகாரங்கள்

[தொகு]
  • 2016ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
  • 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வழங்கப்பட்டது.
  • 2017ஆம் ஆண்டு 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் மிகச் சிறந்த சாதனையாளர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தீபா கர்மாகர் இடம்பிடித்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dipa Karmakar becomes 1st Indian woman gymnast to qualify for Rio Olympics". The Economic Times. Press Trust of India. 19 April 2016. http://economictimes.indiatimes.com/news/sports/dipa-karmakar-becomes-1st-indian-woman-gymnast-to-qualify-for-rio-olympics/articleshow/51872891.cms. பார்த்த நாள்: 21 April 2016. 
  2. 2.0 2.1 Naik, Shivani (18 Apr 2016). "Dipa Karmakar becomes first Indian woman gymnast to qualify for Olympics". The times of india. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
  3. "Simone Biles of USA wins Gold in Women's Vault Gymnastics". Archived from the original on 2019-03-08. பார்க்கப்பட்ட நாள் 2016-08-15.
  4. "Glasgow 2014 - Dipa Karmakar profile". Glasgow 2014 Ltd. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "2014 Commonwealth Games Vault Final Dipa Karmakar 2nd Vault". பார்க்கப்பட்ட நாள் 7 March 2016.
  6. Naik, Shivani (24 August 2014). "After a flight, a landing: Why Dipa Karmakar's medal in Commonwealth Games is its bravest bronze". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 April 2016.
  7. Datta, Sekhar. "Meet Dipa Karmakar first Indian woman gymnast to qualify for Rio Olympics". ABP Live இம் மூலத்தில் இருந்து 20 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170920222257/http://www.abplive.in/sports/meet-dipa-karmakar-first-indian-woman-gymnast-to-qualify-for-olympics-324928. பார்த்த நாள்: 19 April 2016. 
  8. டி. கார்த்திக் (16 திசம்பர் 2018). "சாகச விளையாட்டின் சாதனை மங்கை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபா_கர்மாகர்&oldid=3732581" இலிருந்து மீள்விக்கப்பட்டது