தீசுசு
தீசுசு (Theseus, (UK: /ˈθiːsjuːs/, US: /ˈθiːsiəs/; கிரேக்கம்: Θησεύς) என்பவர் பண்டையக் கிரைக்கத்தின், ஏதென்சின் தொன்மவியல் மன்னரும், நிறுவனரும், வீரரும் ஆவார். வரலாற்றில் இவரது பங்கானது "எர்குலசு புதிய ஒலிம்பியாவை உருவாக்குவது போன்ற ஒரு பெரிய கலாச்சார மாற்றம்" என்று அழைக்கப்படுகிறது. [1] :204தீசுசைச் சுற்றி நிலவும் கற்பனைக்கதைகள்-இவரது பயணங்கள், வீரசாகசங்கள், நண்பர்கள்-காலம் போன்றவை முழுவதும் புனைகதைக்கு வேண்டிய மூலப் பொருட்களை வழங்கியுள்ளன.
தீசுசு சில சமயங்களில் ஏதென்சின் மன்னரான ஏஜியசின் மகனாகவும், சில சமயங்களில் பொசைடன் கடவுளின் மகனாகவும் விவரிக்கப்படுகிறார். இவர் தன் தாயார் ஏத்ராவால் வளர்க்கப்படுகிறார். மேலும் ஏஜியசுடனான தனது தொடர்பைக் கண்டறிந்ததும், ஏதென்சுக்கு நிலத்தின் வழியாக பயணம் செய்கிறார். வழியில் பல சாகசங்களைச் செய்கிறார். இவர் ஏதென்சை அடைந்ததும், ஏஜியஸ் தனக்கு எதிராக சதி செய்யும் மீடியாவை (ஜேசனின் முன்னாள் மனைவி) மணந்திருப்பதைக் காண்கிறார்.
தீசுசைப் பற்றிய மிகவும் பிரபலமான தொன்மக்கதை இவர் மினோட்டூர் என்னும் பாதி மனிதன் மற்றும் பாதி காளையான கொடூரனைக் கொன்றது. பின்னர் இவர் ஏதெனிய ஆட்சியின் கீழ் அட்டிகாவை ஒன்றிணைக்கிறார். ஒன்றிணைத்த மன்னராக, அக்ரோபோலிசு கோட்டையில் ஒரு அரண்மனையை கட்டிய பெருமைக்குரியவர். சினோய்கிஸ்மோசுக்குப் பிறகு, தீசுசு அக்ரோபோலிசின் தெற்குச் சரிவில் அப்ரோடைட் பாண்டெமோசு ('அனைத்து மக்களின் அப்ரோடைட்') வழிபாட்டை நிறுவினார் என்று பௌசானியாஸ் தெரிவிக்கிறார்.
புளூட்டாக்கின் லைஃப் ஆஃப் தீசஸ் கதையில் மினோட்டாரின் மரணம், தீச்சு தப்பித்தல், மினோஸ் மன்னரின் மகள் அரியாட்னி தீசுசு எப்படி காதலித்தார், அவளுக்கு இவர் செய்த துரோகம் பற்றிய பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளது. [i]
உரோமின் உருவாக்க தொன்மமான ரோமுலசின் வாழ்க்கைக்கு இணையான ஒரு வாழ்க்கை கதையை உருவாக்குவதே புளூட்டாக்கின் உறுதியான நோக்கமாக உள்ளது. புளூடாக்கின் தகவல்களுக்கும் பெரிசைட்ஸ் (கிமு ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி), டெமன் (கி.மு. 400), பிலோகோரஸ் மற்றும் கிளீடெமஸ் (கிமு நான்காம் நூற்றாண்டு) ஆகிய வேறு சிலரின் தகவல்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. [2] தொன்மங்களில் குறிப்பிடப்படும், தீசுசு ஒரு உண்மையான நபரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இவர் வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் [3] ஒருவேளை கிமு 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் ஒரு மன்னராக இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் நம்புகின்றனர். [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ruck, Carl A.P., and Danny Staples (1994). "Theseus: Making the New Athens." Pp. 203–222 in The World of Classical Myth. Durham, NC: Carolina Academic Press.
- ↑ Cueva, Edmund P. (1996). "Plutarch's Ariadne in Chariton's Chaereas and Callirhoe." American Journal of Philology, 117(3):473–84.
- ↑ Greene, Andrew. "Theseus, Hero of Athens". 2018-11-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Morford, Mark; Lenardon, Robert J.; Sham, Michael. "Classical Mythology Tenth Edition". Oxford University Press. Oxford University Press. 2014-11-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "lower-roman", but no corresponding <references group="lower-roman"/>
tag was found