தி ஹான்

ஆள்கூறுகள்: 36°46′35″S 146°45′57″E / 36.77639°S 146.76583°E / -36.77639; 146.76583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஹார்ன்
எருமை மலை (மவுன்ட் பஃபல்லோ)
உயர்ந்த இடம்
உயரம்1,723 m (5,653 அடி)வார்ப்புரு:AHD
ஆள்கூறு36°46′35″S 146°45′57″E / 36.77639°S 146.76583°E / -36.77639; 146.76583
புவியியல்
அமைவிடம்விக்டோரியா, ஆத்திரேலியா
மூலத் தொடர்விக்டோரிய ஆல்ப்சு, பெரும் பிரிக்கும் மலைத்தொடர்

தி ஹார்ன் என்பது ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தில் பஃப்பலோ மலையில் உள்ள முக்கியமான சிகரமாகும். இதன் உயரம் 1,723 மீட்டர் (5,653 அடி). இது விக்டோரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. விக்டோரியா ஆல்ப்ஸ், ஆஸ்திரேலியா ஆல்ப்ஸ் மற்றும் பெரும் பிரிக்கும் மலைத்தொடரின் ஓர் பகுதியாக இருக்கிறது. இம்மலையின் உச்சியியில் கருங்கல் பாளங்கள் மற்றும் கற்பாறைகள் காணப்படுகின்றன. அங்கிருக்கக்கூடிய நடைபாதையானது தி ஹான் சிகரத்தின் உச்சிக்கு இட்டுச் செல்கிறது.

எருமை மலையின் அகலப்பரப்புக் காட்சி; தி ஹார்ன் சிகரத்தை படிமத்தின் வலப்புறம் காணலாம்; பாதுகாப்பு தண்டவாளத்துடன் நடைபாதையைக் மேலே காணலாம்

வரலாறு (தொகு)[தொகு]

ஆதிவாசிகள் கோடைகாலங்களில் பஃப்பலோ மலையில் ஏறிச் சென்று அங்குள்ள புரதச் சத்து அதிகம் இருக்கும் பாகாங்க் வகை விட்டில் பூச்சிகளை சேகாிப்பர். இவ்வகைப் பூச்சிகள் பாறையிடுக்குகளில் கூட்டமாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது ஆதிவாசிகள் ஒன்று கூடி திருவிழாக்கள் கொண்டாடுகின்றனர். 1824-ல் ஆராய்ச்சியாளர்களான ஹீயூம் மற்றும் ஹோவல் ஆகிய இருவரால் எருமை மலை என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் தோற்றம் எருமையை ஒத்திருப்பதால் இதற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

External links[தொகு]

References[தொகு]

வார்ப்புரு:Victorian mountains

வார்ப்புரு:VictoriaAU-geo-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஹான்&oldid=3216041" இலிருந்து மீள்விக்கப்பட்டது