தி. சுப்புலாபுரம்

ஆள்கூறுகள்: 10°0′52.03″N 77°39′22.37″E / 10.0144528°N 77.6562139°E / 10.0144528; 77.6562139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. சுப்புலாபுரம்
—  கிராமப் பஞ்சாயத்து  —
தி. சுப்புலாபுரம்
இருப்பிடம்: தி. சுப்புலாபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°0′52.03″N 77°39′22.37″E / 10.0144528°N 77.6562139°E / 10.0144528; 77.6562139
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தி. சுப்புலாபுரம் ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதியிலுள்ள கிராமப் பஞ்சாயத்துகளுள் ஒன்று. [4][5]. இது ஆண்டிப்பட்டியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும் தேனியில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரில் உள்ள தி எனும் முன்னொட்டு இந்த ஊர் திம்மரசநாயக்கனூரைக் குறிக்கிறது. ஒரே பெயரில் பல ஊர்கள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க இந்த முன்னொட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதே பெயர் தாங்கி கண்டமனூர் சாலையில் சுப்புலாபுரம் உள்ளது அதன் பெயர் எம்(மரிக்குண்டு).சுப்புலாபுரம்.உழவும் நெசவும் இவ்வூரின் முக்கியத் தொழில்கள். பல கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலகங்கள் இங்கே செயல்படுகின்றன. அதில் TRT TeX குறிப்பிடும்படியான வர்த்தகம் புரிகிறது... இந்த ஊரில் நெய்யப்படும் துணிகளுக்கு தனி மவுசு தமிழகமெங்கும் உண்டு...

இந்த ஊரிலுள்ள நாழிமலைக்கருகில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. சிறப்பான ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது, அஞ்சலகம், வங்கி (சவுத் இந்தியன் வங்கி)[6] ஆகிய அடிப்படை வசதிகளும் அமைந்துள்ளன.


தமிழகத்தில் சாலியர் சமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் ஊர்களுள் ஒன்று. இந்த ஊரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வாழும் “பெரிய வீடு” என்று அழைக்கப்படும் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. நூறாண்டுகளுக்கும் பழைமையான இந்த வீட்டில் நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

இதற்கடுத்தபடியாக கவரா நாயுடு சமூக மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர்...

கண்ணன் இலவச கல்வி மையம்

இந்த கல்வி சேவை மையம் சமூக நல கண்ணோட்டமுள்ள நபர்களால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2013-2014) கல்வி ஆண்டில் 11 மாணவ மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.


இந்த கல்வி நிலையம் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற போதிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது சிறப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-01-09.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-12. பார்க்கப்பட்ட நாள் 2013-01-09.
  6. "தேனி மாவட்டத்தில் உள்ள வங்கிகள்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சுப்புலாபுரம்&oldid=3557867" இலிருந்து மீள்விக்கப்பட்டது