உள்ளடக்கத்துக்குச் செல்

தி. சதாசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகராஜன் சதாசிவம்
பிறப்பு(1902-09-04)செப்டம்பர் 4, 1902
ஆங்கரை, திருச்சி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்புநவம்பர் 22, 1997(1997-11-22) (அகவை 95)
சென்னை
பணிஎழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலை இயக்க செயற்பாட்டளர், பாடகர், தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
அபித்தகுச்சம்பாள், ம. ச. சுப்புலட்சுமி
உறவினர்கள்ராதா விஸ்வநாதன் (மகள்), விஜயா ராஜேந்திரன்

தியாகராஜன் சதாசிவம் (செப்டம்பர் 4, 1902 - நவம்பர் 22, 1997[1]) இந்தியாவின் முன்னணி விடுதலைப் போராட்ட வீரரும், பாடகரும், பத்திரிகையாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து கல்கி வார இதழைத் தொடங்கியவர். கிருஷ்ணமூர்த்தியின் இறப்புக்குப் பின்னர் கல்கி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் பிரபல கருநாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் கணவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கல்கி சதாசிவம் திருச்சி ஆங்கரை என்ற ஊரில் தியாகராஜன் ஐயர், மங்களம் ஆகியோரின் 16 பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தார். லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால், பால கங்காதர திலகர், அரவிந்தர் ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்ட சதாசிவம் இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சுப்பிரமணிய சிவாவைக் குருவாக ஏற்றுக் கொண்டார். இதனால் பள்ளியில் இருந்து விலகி பாரத சமாச இயக்கத்தில் இணைந்தார்.[2] பின்னர் இராசகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி ஆகியோரின் பால் ஈர்க்கப்பட்டு அறப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மூத்த மனைவி அபிதகுஜாம்பாள் வாயிலாக இராதா, விஜயா ஆகியோர் இவரின் பெண் பிள்ளைகள் ஆவர். 1936 சூலையில் சுப்புலட்சுமியை சந்தித்தார். முதல் மனைவி இறந்ததை அடுத்து சுப்புலட்சுமியை 10 சூலை 1940 அன்று மறுமணம் புரிந்தார்.

திரைப்படத் தயாரிப்புகள்

[தொகு]

இவர் தன் மனைவி எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து சந்திர பிரபா சினிடோன் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, 1939-இல் சகுந்தலை எனும் திரைப்படத்தை தயாரித்தார்.[3]இத்திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலெட்சுமி சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சதாசிவம்&oldid=3394211" இலிருந்து மீள்விக்கப்பட்டது