திஷானி தோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திஷானி தோஷி

புரூக்ளின் புத்தக விழாவில் திஷானி தோஷி
தொழில் பாடலாசிரியர், எழுத்தாளர், நடன மங்கை
www.tishanidoshi.com

திஷானி தோஷி (Tishani Doshi) சென்னையைச் சேர்ந்த ஓர் இந்தியக் கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் நடன மங்கை ஆவார்.

வரலாறு[தொகு]

திஷானி தோஷி, இந்தியாவில் உள்ள மெட்ராஸ் நகரத்தில் வெல்ஷ் தாய் மற்றும் குஜராத்தி தந்தை ஆகியோருக்கு 1975 ல் திசம்ம்ப்பாற் 9 ஆம் நாள் பிறந்தார்.[1] இவர், 2001இல் கவிதைக்கான எரிக் கிரிகோரி விருது பெற்றார். இவரது முதல் கவிதை தொகுப்பு, "கன்ட்ரீஸ் ஆஃப் த பாடி" 2006இல் ஃபார்வர்ட் பொயட்ரி பரிசு வென்றது.[2] 2006 ஆம் ஆண்டின் கார்டியன் ஸ்பான்சர் ஹே ஃபெஸ்டிவல் மற்றும் 2007 ஆம் ஆண்டின் கார்டகெனா ஹே விழாவின் கவிதை அரங்கிற்கு இவர் அழைக்கப்பட்டார். அவருடைய முதல் புதினம், " த ப்ளெசர் சீக்கர்ஸ்" ப்ளூம்ஸ்பரி நிறுவனத்தால் 2010இல் வெளியிடப்பட்டது. மற்றும் ஆரஞ்சு பரிசு 2011 பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.[3] தி இந்து சிறந்த கதை விருதுக்காக 2010 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரிக்கெட்டோவில் ,[4] ஒரு கிரிக்கெட் தொடர்பான வலைத்தளத்தில் "ஹிட் அல்லது மிஸ்" என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை எழுதுகிறார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் எழுதியதில், திஷானி தோஷி இந்திய பிரீமியர் லீகின் இரண்டாம் பருவத்தின் ஒரு தொலைக்காட்சி பார்வையாளராக தன் அவதானிப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டார். இவர், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடன் இணைந்து பணியாற்றினார்.[5]

அவர் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராகப் பணிபுரிகிறார் மற்றும் டிசம்பர் 2006 வரை நடனக்கலைஞர் சந்திரலேகாவுடன் பணிபுரிந்தார்.[6] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் படைப்பாக்க எழுத்துகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

"கன்ட்ரீஸ் ஆஃப் த பாடி" 2006 இல் ஹே-ஆன்-வை-விழாவில் சீமாஸ் ஹேனே, மார்கரெட் அட்வுட் மற்றும் பலரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தொடக்கக் கவிதையான, "த டே வி வென்ட் டு த சி", 2005 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சிலின் அனைத்து இந்திய கவிதைகள் போட்டியில் வெற்றி பெற்றது; மேலும், இவர் அவுட்லுக்-பிகாடார் நான் ஃபிக்ஷன் போட்டியில் ஒரு இறுதிப் போட்டியாளராக இருந்தார்.

அவரது சிறுகதையான "லேடி கஸ்ஸாண்ட்ரா, ஸ்பார்டகஸ் மற்றும் டான்ஸிங் மேன்" 2007 ஆம் ஆண்டில் த டிராப்பிரிட்ஜ் இதழில் முழுமையாக வெளியிடப்பட்டது.[7]

அவரது கவிதை தொகுப்பான "எவரிதிங் பிகின்ஸ் எல்ஸ்வேர்" [8] 2013 இல் காப்பர் கனியன் பிரஸ் ஆல் வெளியிடப்பட்டது.

அவரது சமீபத்திய கவிதைப் புத்தகம், "கேர்ள்ஸ் ஆர் கமிங் அவுட் ஆஃப் த வூட்ஸ்" ,[9] ஹார்பர் காலின்ஸ் இந்தியாவால் 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திஷானி_தோஷி&oldid=2727571" இருந்து மீள்விக்கப்பட்டது