உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி-6
பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்இராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா
தயாரிப்புஇராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா
ரோன்னி சுரூவ்லா
திரைக்கதைஇராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா
பிராசூன் ஜோஷி
கமலேஷ் பான்டே
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅபிசேக் பச்சன்
சோனம் கபூர்
அதிதி ராவ் ஹைதாரி
ரிசி கபூர்
சுப்ரியா பதக்
அதுல் குல்கர்ணி
பவன் மல்கோத்ரா
திவ்யா தத்தா
தீபக் தோப்ரியா
விஜய் ராஸ்
ஓம் பூரி
வஹீதா ரெஹ்மான்
ஒளிப்பதிவுவினோத் பிரதான்
படத்தொகுப்புபி. எஸ். பாரதி
கலையகம்ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ரா பிக்சர்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு20 பெப்பிரவரி 2009 (2009-02-20)
ஓட்டம்140 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி

தில்லி-6 (Delhi-6) என்பது ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கி 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழித் திரைப்படமாகும். படத்தில் அபிசேக் பச்சன் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக நடித்துள்ளார். அவருடன் சோனம் கபூர், ஓம் பூரி, வஹீதா ரெஹ்மான், ரிஷி கபூர், அதுல் குல்கர்ணி, தீபக் தோப்ரியல், திவ்யா தத்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.[2] இத்திரைப்படம் பழைய தில்லியில் உள்ள சாந்தினி சௌக் எனப்படும் இடத்தில் இயக்குநர் மெஹ்ரா வாழ்ந்து வளர்ந்த நாட்களைக் குறிக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளது.[3] 20 பெப்ரவரி 2009 அன்று வெளியானது. பொதுவாக, கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இப்படத்தில் சோனம் கபூர், அதிதி ராவ் ஹைதாரி, ரிசி கபூர், சுப்ரியா பதக், அதுல் குல்கர்ணி, பவன் மல்ஹோத்ரா, தீபக் டோப்ரியால், திவ்யா தத்தா, விஜய் ராஸ், ஓம் பூரி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இது தான் அதிதி ராவ் ஹைதரி இந்தியில் நடித்த முதல் திரைப்படம் ஆகும்.[4] எண் 6 என்பது பழைய தில்லியின் சாந்தினி சவுக் பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் குறிக்கிறது. இது 110006 என்பதன் சுருக்கமான வடிவமாகும். இது அக்ஸ் (2001), ரங் தே பசந்தி (2006) படங்களுக்குப் பிறகு இயக்குநர் மெஹ்ரா இயக்கிய மூன்றாவது படம் ஆகும்.

நடிப்பு

[தொகு]

கதைச் சுருக்கம்

[தொகு]

அபிஷேக் பச்சன் தனது நோய்வாய்ப்பட்ட பாட்டியுடன் (வஹீதா ரெஹ்மான் பாட்டியாக நடித்தார்) இந்தியாவுக்கு வருகிறார். இங்கே ஒரு மர்மமான குரங்கு மனிதன் தாக்குதலில்சிக்குவதற்கு முன்பு தனது வேர்களைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறார்.

இசை

[தொகு]

ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இப்படத்தின் ஒலிப்பதிவு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இசை விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delhi-6". BBFC. Archived from the original on 15 April 2009. Retrieved 16 November 2010.
  2. "Rakeysh Mehra's Delhi-6 to star Hrithik Roshan and Om Puri". Retrieved 25 September 2006.
  3. "Abhishek Bachchan to do three Rakeysh Mehra films". Retrieved 25 September 2006.
  4. "Rakesh Mehra's Delhi-6 to star Hrithik Roshan and Om Puri". m IndiaFM. Retrieved 25 September 2006.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_6&oldid=4229401" இலிருந்து மீள்விக்கப்பட்டது