தில்லா ஜோகியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லா ஜோகியன் (Tilla Jogian ) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் உப்பு மலைத்தொடரில் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு கைவிடப்பட்ட இந்து கோயில் மற்றும் துறவியின் வளாகமாகும்.

இந்த வளாகம் 1947 க்கு முன்னர் பஞ்சாபில் இந்துக்களுக்கு மிக முக்கியமான மையமாக இருந்துள்ளது. மேலும் இது நூற்றுக்கணக்கான சந்நியாசிகளையும் கொண்டிருந்தது. சீக்கிய மத நிறுவனர் குரு நானக்குடனான தொடர்புக்காக இந்த தளம் சீக்கிய மதத்திலும் முக்கியமானது.

இருப்பிடம்[தொகு]

ஜீலம் மற்றும் தினா நகரங்களுக்கு மேற்கே சுமார் 25 கி.மீ தொலைவில் பாக்கித்தானின் பொட்டோகார் பீடபூமியில் தில்லா ஜோகியன் வளாகம் அமைந்துள்ளது. இது குகாவிலிருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த வளாகம் ஜீலம் நதி மற்றும் பெரும் தலைநெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது - இது மத்திய ஆசியாவை இந்தியாவுடன் இணைத்த பண்டைய பாதையாகும். தில்லா ஜோகியன் ரோடாசு கோட்டைக்கு அருகிலும், கட்டாசு ராஜ் கோயில்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது. ஒரு புனித குளம் கொண்ட மற்றொரு முக்கியமான இந்து யாத்திரைத் தளமாகும் இது இந்து கடவுளான சிவனின் கண்ணீரிலிருந்து உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தில்லா ஜோகியன் வளாகம் உப்பு மலைத்தொடர், அதே பெயரில் ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. கோயில்கள் மலையின் உச்சிக்கு அருகில் 975 மீட்டர் (3200 அடி) உயரத்தில் அமைந்துள்ளன. இதன் விளைவாக பஞ்சாப் சமவெளிகளுடன் ஒப்பிடும்போது குளிரான மற்றும் ஈரமான காலநிலை உருவாகிறது. ஆலிவ் மரங்கள், பைன்கள் மற்றும் அகாசியா மொடெஸ்டா ஆகியவற்றால் காடுகள் நிறைந்த ஒரு பகுதியில் இந்த வளாகம் அமைந்துள்ளது. [1]

வரலாறு[தொகு]

மகாராஜா ரஞ்சித் சிங் ஒரு சிறிய நினைவுச்சின்னத்தை கட்டினார். இந்த இடத்தில் 40 நாட்கள் தங்கியிருந்தபோது குருநானக் தியானித்த இடத்தை குறிக்கிறது.

தில்லா ஜோகியன் குறைந்தது 2000 ஆண்டுகளாக இந்து புனித யாத்திரை மையமாக இருப்பதாக பிரபலமாக நம்பப்படுகிறது. [1] இந்த வளாகம் கிமு 1 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. [2] கான்பட்டா ஜோகி, அதன் உறுப்பினர்களின் காதுகளை குத்துவதற்கு குறிப்பிடப்பட்ட ஒரு சந்நியாசியான குரு கோரக்நாத் என்பவரால் நிறுவப்பட்டது. இது தில்லா ஜோகியனை மையமாகக் கொண்டது. [3]

இந்து புனித யாத்திரை மையமாக தில்லா ஜோகியனின் முக்கியத்துவம் சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக்கை ஈர்த்தது, 1500 களின் முற்பகுதியில் 40 நாட்கள் இங்கு தியானித்தார். முகலாய பேரரசர் அக்பர் செல்வாக்குமிக்க மற்றும் பரவலாக மதிக்கப்படும் "பால்நாத் ஆலயத்தை" பார்வையிட்டுள்ளார். இந்த பிரகாசத்தை அவரது வரலாற்றாசிரியர் அபுல் ஃபசால் "மிகவும் பழமையான்து" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்பர் இந்த தளத்தின் பழைய காலத்தைக் கண்டு ஆச்சரியமானார். 17 ஆம் நூற்றாண்டின் பேரரசர் ஜஹாங்கிர் கோயில் வளாகத்தையும் பார்வையிட்டுள்ளார். முகலாய ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இந்த வளாகத்தை பஷ்தூன் மன்னர் அகமத் ஷா அப்தாலி, [2] பஞ்சாபிற்குள் மேற்கொண்ட பல போரில் இதையும் கைப்பற்றி சூறையாடினார். அப்தாலியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்த வளாகம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகாராஜா ரஞ்சித் சிங், குருநானக்கின் வருகையை நினைவு கூர்ந்தார். கல்லால் கட்டப்பட்ட குளம் மற்றும் குருநானக் வழக்கமாக தியானித்ததாகக் கூறப்படும் சரியான இடத்தைக் குறிக்க ஒரு சிறிய நினைவுச்சின்னம் எழுப்பினார். [4]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Rashid, Salman (20 July 2012). "Tilla Jogian". Express Tribune. https://tribune.com.pk/story/411011/tilla-jogian/. பார்த்த நாள்: 28 June 2017. 
  2. 2.0 2.1 Tilla Jogian Hindu heritage
  3. Gorakhnāth and the Kānphaṭa Yogīs, George Weston Briggs, Motilal Banarsidass Publishers, 1938, ISBN 9788120805644, ... The Kanphatas possess many monasteries ... but that at Tilla, in the Panjab, is generally considered to be the chief seat of the Gorkhnathis ...
  4. Bansal, Bobby Singh (2015). Remnants of the Sikh Empire: Historical Sikh Monuments in India & Pakistan. https://books.google.com/books?id=jUiwDAAAQBAJ&dq=tilla+jogian&source=gbs_navlinks_s. பார்த்த நாள்: 28 June 2017. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லா_ஜோகியன்&oldid=3067580" இலிருந்து மீள்விக்கப்பட்டது