திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவாமூர் பசுபதீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் திருவாமூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்பு இவ்வூர் திருஆமூர் என்றழைக்கப்பட்டது. இத்தலத்தின் பெருமை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் காணப்படுகிறது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக பதிபதீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார்.கோயிலின் தல மரம் கொன்றை ஆகும். அப்பர் என்றழைக்கப்படுகின்ற நாவுக்கரசர் அவதரித்த பெருமையுடைய தலமாகும்.[1]

அமைப்பு[தொகு]

பழமை வாய்ந்த இக்கோயிலின் மூலவருக்கு முன்பாக அப்பர் நின்ற நிலையில் உழவாரத்துடன் காணப்படுகிறார். அருணகிரிநாதர் இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி திருப்புகழில் பாடியுள்ளார். அப்பரின் மூத்த சகோதரியான திலகவதியாருக்கும், தாயாரான மாதினியார், தகப்பனாரான புகழனார் ஆகியோருக்கு தனியாக சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றிலும் அப்பர் சிற்பம் உள்ளது.[1]

விழாக்கள்[தொகு]

அப்பருக்கு குரு பூசை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்திலும், அவதார நாள் பங்குனி மாதத்திலும் நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]